இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மூலம் 78 வகையான நோய்கள் இருப்பதாக ஆய்வின் மூலம் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
ரூபாய் நோட்டுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல்களை கண்டறிந்து பொதுமக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டன. இந்த நோட்டுகளை டெல்லியில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ.ஆர். மற்றும் ஐ.சி.ஐ.பி அமைப்பின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ரூபாய் நோட்டுகளில் 70 சதவீதம் பூசனமும், 9 சதவீதம் பாக்டீரியாவும், 1 சதவீதம் வைரசும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் ஆபத்தை விளை விக்கக்கூடிய காசநோய், பல்வேறுவிதமான தோல் நோய்கள் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ரூபாய், 20 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதிகமான புழக்கம் காரணமாக 78 வகையான நோய் கிருமிகள் பரவுவதாக ஆய்வு மையம் தெரிக்கிறது. ஒருவரிடம் இருந்து பலருக்கு ரூபாய் நோட்டுகள் கைமாறுவதால் நோய்கள் பரவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...