சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன.சென்னை
மாநகராட்சி சார்பில் 32 மேல்நிலைப் பள்ளிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்று கடந்த 2
ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இப்போது 2 ஆண்டுகள் ஆகியும் 13
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே கண்காணிப்புக் கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
இதுவரையில் 13 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 19 பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடிய விரையில் கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், மாநகராட்சிப் பள்ளிகளின் பாதுகாப்புக்காக ஒப்பந்த முறையில் காவலாளிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...