ஊழல், அதிகாரிகள் வசூல் வேட்டையைத்தடுக்க, தனியார் பள்ளிகளுக்கு புதிய
அங்கீகார பணிகளை, 'ஆன்-லைன்' வழியில் மேற்கொள்ள, பள்ளிக்கல்வித் துறை
திட்டமிட்டுஉள்ளது. தமிழகத்தில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார்
பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும், புதிதாக ஏராளமான தனியார் பள்ளிகள்
துவங்கப்படுகின்றன.
முக்கிய கட்டம்நர்சரி பள்ளிகள் தொடக்கக்கல்வியிலும்,
மெட்ரிக் பள்ளிகள், மெட்ரிக் இயக்குனரகத்திலும், மத்திய இடைநிலைக் கல்வி
வாரிய சி.பி.எஸ்.இ., பள்ளிகள், பள்ளிக்கல்விஇயக்குனரகத்திலும், அங்கீகாரம்
பெறுகின்றன.மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரத்தை புதுப்பிக்கப்பட
வேண்டும். புதுப்பிக்கவும், புதிய அங்கீகாரம் பெறவும், போதிய நிலப்பரப்பு,
உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு வசதிகள், அனைத்து வகை சான்றுகள்,
ஆசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் நிர்ணயம் என, பல முக்கியக்
கட்டுப்பாடுகள் உள்ளன.ஆனால், பெரும்பாலான பள்ளிகள் இந்த நிபந்தனைகளை
பூர்த்தி செய்யமுடியாமல் தடுமாறும் நிலையில், அரசியல்வாதிகள், அதிகாரிகள்,
வி.ஐ.பி.,க்களின் தலையீட்டின் படி, தனிப்பட்ட முறையில் 'கவனிக்கப்பட்டும்'
அங்கீகாரம் பெறப்படுகிறது.
இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இப்பள்ளிகளின் மாணவ, மாணவியர்
பொதுத் தேர்வு எழுதும்போதோ, கட்டண நிர்ணயம் செய்யும் போதோ, விபத்துகள்
ஏற்படும்போதோ அங்கீகாரம் குறித்து சர்ச்சை எழுகிறது.விதிமுறைகள்எனவே,
அங்கீகாரம் வழங்குவதை முறைப்படுத்த, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை முடிவு
செய்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம்,
ஆன்-லைனில் அங்கீகாரம் தரும் முறையை பின்பற்றி, பள்ளிகளின் அங்கீகாரத்தை,
ஆன்-லைனில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
புதிய நர்சரி, பிரைமரி, பிளே ஸ்கூல்கள், மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரவும், புதுப்பிக்கவும், புதிய, ஆன்-லைன் தளம்
உருவாக்க திட்டம் உள்ளது.இதுகுறித்து, பள்ளி உரிமையாளர் சங்கங்கள்,
பெற்றோர் - ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வியாளர்களிடம் விவாதித்து, புதிய
விதிமுறைகள் கொண்டு வரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்த முறையால்,
லஞ்சம் கொடுத்து அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரத்துக்காக பள்ளிகளை
அரசியல்வாதிகள் மிரட்டுவது போன்ற பிரச்னைகள் குறையும் என
எதிர்பார்க்கப்படுகிறது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...