நகர்
ஊரமைப்புத் துறையான டி.டி.சி.பி.,யில் சர்வேயர் உதவி வரைவாளர்களுக்கான 98
பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை
துவக்கப்பட்டு உள்ளது.இதற்கு தகுதி உள்ளவர்கள் ஜூலை 27ம் தேதி வரை
டி.டி.சி.பி.,யின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, ஜூலை 4ம் தேதி
அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்த கால அவகாசம் ஆக., 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், www.dtcpexam.com என்ற இணையதளத்தின் வாயிலாக, கூடுதல் விவரங்களை பெற்று விண்ணப்பிக்கலாம் என நகரமைப்புத் துறை அறிவித்து உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...