Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அங்கீகாரமுள்ள படிப்புகள் - அங்கீகாரம் இல்லாத படிப்புகள் ; 'டுபாக்கூர்' நர்சிங் கல்லூரிகள்: கவுன்சில் எச்சரிக்கை

        'பல நிறுவனங்கள், அங்கீகாரம் பெறாத நர்சிங் படிப்புகளை நடத்தி வருவதால், அவற்றில் சேர்ந்து மாணவ, மாணவியர் ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது.தமிழகத்தில், நர்சிங் பள்ளி மற்றும் கல்லுாரிகள் நடத்த, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் அனுமதி தரவேண்டும். ஆனால், அப்படி அனுமதி பெறாமல், பல அமைப்புகளும், விதவிதமான பெயர்களில், நர்சிங் படிப்புகளை நடத்தி வருகின்றன.


'குறைந்த கட்டணம், படிக்கும் போதே சம்பளம்' என்ற கவர்ச்சி விளம்பரத்தை நம்பி, இவற்றில் சேரும் மாணவர்கள், சான்றிதழை பதிவு செய்ய முடியாமல், திணறுகின்றனர். எனவே, 'இதுபோன்ற, 'டுபாக்கூர்' கல்லுாரிகளில் சேர்ந்து ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது. இதுகுறித்து, நர்சிங் கவுன்சில் பதிவாளர் ஆனிகிரேஷ் கலைமதி கூறியதாவது:
அங்கீகாரம் உள்ள நர்சிங் பயிற்சி நிறுவனங்களில் படிப்பதே, முறையான கல்வி. அங்கீகாரம் இல்லாத பல படிப்புகள், சங்கங்கள், மருத்துவமனைகள் மற்றும் பல்கலைகளிலும் நடத்தப்படுகின்றன. சான்றிதழை பதிவு செய்ய முடியாதது தெரிந்ததும், ஏமாற்றம், காலம், பண விரயத்தை நினைத்து, மாணவர்கள் மனமுடைந்து போகின்றனர்.

பாரத் சேவாக் சமாஜ் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, போலி பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, ஏமாற வேண்டாம். தமிழகத்தில், 169 நர்சிங் கல்லுாரிகள், 204 நர்சிங் பள்ளிகள் அனுமதி பெற்றுள்ளன. இதன் விவரங்களை www.tamilnadunursingcouncil.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

அங்கீகாரமுள்ள படிப்புகள்
பி.எஸ்சி., நர்சிங் - 4 ஆண்டு
டிப்ளமோ இன் நர்சிங் - 3 ஆண்டு
டிப்ளமோ இன் ஆக்சிலரி நர்ஸ் மிட்வைப் - 2 ஆண்டு
இவை, மூன்றும், பிளஸ் 2 முடிந்த பின் படிக்கும் படிப்புகள். இவை, நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய தகுதியானவை. நர்சிங் கவுன்சிலில் பதிவு பெற்றால், உலகம் முழுவதும் பணியாற்ற முடியும்.

அங்கீகாரம் இல்லாத படிப்புகள்
டிப்ளமோ இன் நர்சிங் அசிஸ்டெண்ட் (6 மாதம்,
2 ஆண்டுகள்)
டிப்ளமோ இன் நர்சிங் (2 ஆண்டு)
டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு நர்சிங் (2 ஆண்டு)
வில்லேஜ் ஹெல்த் நர்சிங் (2 ஆண்டு)
டிப்ளமோ இன் நர்சிங் எய்டு (2 ஆண்டு)
டிப்ளமோ இன் பர்ஸ்ட் எய்டு மற்றும் பிராக்டிக்கல் நர்சிங்
டிப்ளமோ இன் பிராக்டிக்கல் நர்சிங் (1 ஆண்டு, 2 ஆண்டுகள்)
சர்டிபிகேட் இன் நர்சிங் (1 ஆண்டு)
நான் டெக்னீசியன் கோர்ஸ்
டிப்ளமோ இன் நர்சிங் எய்டு (2 ஆண்டு)-




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive