நாட்டு மக்களிடை.ேய இந்த ஒற்றை வார்த்தை, தேசிய உணர்வைதட்டி எழுப்பியது.
அது தான் 'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கம். சுதந்திர போராட்டத்தின் போது இந்த
வார்த்தையை உச்சரிக்கும் போது, மக்களின் சுதந்திர தாகம் அதிகரித்தது.
அப்போது முதல் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் வாழும் அனைத்து
இந்தியர்களிடமும் இது வாழ்த்தாக ஒலித்தது. நாட்டின் முதல் பிரதமராக
பதவியேற்ற நேரு, முதல் சுதந்திர உரையை 'ஜெய்ஹிந்த்' என்று கரம் உயர்த்தி
கூறி முடித்தார். நேதாஜியும், நேருவும் இருவேறு நிலைகளில் நின்று
போராடியவர்கள். ஆனால், இருவரது நோக்கமும் (நாடு விடுதலை) ஒன்று தான்.
'ஜெய்ஹிந்த்' என்ற முழக்கம் நேதாஜியால் உருவாக்கப்பட்டது. சுதந்திர
இந்தியாவில் நேரு அதனை ஆர்வமுடன் அரங்கேற்றினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...