தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய மத்திய
அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஈக்விட்டி சந்தைகளில் பென்சன் நிதி முதலீடு
செய்யப்படுவது 64 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.இதுகுறித்து,
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் ஆணையர் கே.கே.ஜாலன் தெரிவித்தவை
பின்வருமாறு:-
இதற்காக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் கிடைக்கும் வருவாயை
பொறுத்து ஈக்விட்டி சந்தையில் அதிகமாக முதலீடு செய்வது பற்றி
ஆலோசிக்கப்படும்.இவ்வாறு கே.கே.ஜாலன் தெரிவித்தார்.ஈ.பி.எப்.ஓ. நிறுவனம்
தற்போது ரூ.8.5 டிரில்லியன் சேமிப்பு பணத்தை அரசு பத்திரங்கள் வாயிலாக
நிர்வகித்து வருகிறது. ஏற்கனவே, புதிய பென்சன் நிதி பணத்தில் 5 சதவீதத்தை
ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்ய இருப்பதாகமத்திய அரசு அறிவித்திருந்தது.
இவற்றில் 3-ல் ஒரு பகுதியை
தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்களை பின்தொடரும் ஈ.டி.எப். பண்டுகளிலும்,
மீதமுள்ளவை மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண்களை பின்தொடரும் ஈ.டி.எப்.
பண்டுகளிலும் முதலீடு செய்யப்படும்.நடப்பு ஆண்டின் நிலவரப்படி, தேசிய
பங்குச்சந்தை குறியீட்டெண் 3.7 சதவீதமும், மும்பை பங்குச்சந்தை
குறியீட்டெண் 2.9 சதவீதமும் கடந்த ஆண்டை காட்டிலும் உயர்ந்து இருப்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...