வங்கிகளில், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன்
பெற்றவர்களுக்கு, வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், வட்டி
தள்ளுபடி அளிக்க வங்கிகள் மறுப்பதாகஏராளமான புகார்கள் வந்தன.
இந்நிலையில், இந்திய வங்கிகள் சங்கம், நேற்று(28-08-15)
வெளியிட்டுள்ள அறிக்கை: 'கல்விக்கடனுக்கு, அரசு அறிவித்துள்ள வட்டி
தள்ளுபடியை, வங்கிகள் உடனே அளிக்க வேண்டும். வட்டி தள்ளுபடி பெற,
தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை, வங்கியின் இணையதளங்களில் வெளியிட
வேண்டும்.இணையதளத்தில் விவரங்கள் வெளியிட்டுள்ளது குறித்தும் அறிவிக்க
வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கூறியுள்ளது.
இதையேற்று, அனைத்து வங்கிகளும், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி
வரை, வங்கிக்கடன் பெற்ற மாணவர்களுக்கு, வட்டி தள்ளுபடி அளிக்க வேண்டும்.
வட்டி தள்ளுபடி பெற மாணவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. மாணவர்களே
வங்கிகளை அணுகி, வட்டி தள்ளுபடியைப் பெறலாம். இவ்வாறு, வங்கிகள் சங்கம்
கூறியுள்ளது.
இதுகுறித்து, கல்விக்கடன் ஆலோசனைக் குழு அமைப்பாளர், 'பிரைம் பாயின்ட்'
சீனிவாசன் கூறியதாவது: வட்டி தள்ளுபடி பெற, வங்கியில் மனு கொடுக்க
வேண்டும். வட்டி தள்ளுபடி தர மறுக்கும் வங்கிகள் மீது சம்பந்தப்பட்ட
வங்கியின் தலைவரிடம் புகார் செய்யலாம். புகாரின் பிரதியை, இந்திய வங்கிகள்
சங்கத்துக்கும் அனுப்பலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...