Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுக் கல்லூரியில் இடம் அளிக்க லஞ்சம்: முதல்வர் மீது மாணவர்கள் புகார்

     சென்னையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பில் இடம் கொடுக்க லஞ்சம் வாங்கியதாக, அந்தக் கல்லூரி முதல்வர் மீது மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான புகாரை உரிய ஆதாரங்களுடன் உயர் கல்வித் துறையிலும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
 இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் சிலர் கூறியது: சென்னையைச் சேர்ந்த ஏழை மாணவர் ஒருவர் பி.காம். படிப்பில் சேருவதற்காக, சென்னை- வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரியில் கடந்த 10 நாள் களுக்கு முன்னர் விண்ணப்பித்தார்.

 அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நவமணி, ""பிளஸ் 2 பொதுத் தேர்வில் 624 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளதால், இந்த மதிப்பெண்ணுக்கெல்லாம் கல்லூரியில் இடம் கிடைக்காது. இருந்தபோதும் ரூ. 15,000 கொடுத்தால் இடம் 
 கிடைக்கும்'' என்று கூறியுள்ளார்.
 இதுகுறித்து, அந்த மாணவர் அதே கல்லூரியில் படித்த தனது சகோதரரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவருடைய சகோதரர் கல்லூரி முதல்வரைத் தொடர்பு கொண்டு கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்று கோரியுள்ளார். 
 அப்போது, ""உனது சகோதரர் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இருந்தபோதும் மிகுந்த சிரமப்பட்டு இடம் தர முன்வந்திருக்கிறேன். இதற்கே நீங்கள் நன்றி கூற வேண்டும். கட்டணத்தைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. மேலும், சகோதரரை நேரடியாக பி.காம். படிப்பில் சேர்க்க முடியாது. முதலில் பி.ஏ. பாதுகாப்புக் கல்வித் துறையில் சேர்த்துவிட்டு, பின்னர் பி.காம். படிப்புக்கு மாற்றிவிடலாம்'' என்று கூறியுள்ளார்.
 இதற்கு மாணவர் ஒப்புக்கொள்ளவே, பணத்துடன் தியாகராயநகர் பேருந்து நிலையத்துக்கு வருமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதை செல்லிடப்பேசியில் படம் பிடிக்கத் திட்டமிட்ட அந்த மாணவரும், அவருடைய சகோதரரும் தங்களுடைய சட்டைப் பையில் கேமராவுடன் கூடிய செல்லிடப்பேசியை வைத்துக்கொண்டு அங்கு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் முகத்தில் கைக்குட்டையை வைத்து மறைத்துக்கொண்டு கல்லூரி முதல்வர் நவமணி அங்கு வந்துள்ளார். அவரிடம் ரூ. 7 ஆயிரம் முன்பணமாகக் கொடுத்த அவர்கள், மீதித் தொகையை அடுத்த நாள் காலையில் தருவதாகக் கூறியுள்ளனர். 
 அதற்கு ஒப்புக்கொண்ட முதல்வர், உறுயளித்தபடி ஆகஸ்ட் 5-ஆம் தேதி பி.ஏ. பாதுகாப்புக் கல்வித் துறையில் அந்த மாணவருக்கு இடம் அளித்துள்ளார். அரசுக் கல்லூரிகளில் இத்தகைய முறைகேடுகள் நிகழ்வது ஏழை மாணவர்களின் உயர்கல்வியை கேள்விக்குறி ஆக்குகிறது. இதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, இதுபோன்ற முறைகேடுகள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையில், செல்லிடப்பேசியில் எடுக்கப்பட்ட விடியோ ஆதாரங்களுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பனிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive