தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர் கூடுதல்
பொறுப்பில் இருந்து, செய்யாறு கல்லுாரி முதல்வர் தேவதாஸ், திடீரென
நீக்கப்பட்டு உள்ளார். அதே நேரத்தில், புதிய இயக்குனரையும், கூடுதல்
பொறுப்பிலேயே நியமித்துள்ளதற்கு, கல்லுாரி ஆசிரியர்கள் ஆட்சேபம்
தெரிவித்துள்ளனர்.தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர், தமிழகம் முழுவதும் உள்ள, 700 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை நிர்வகிக்கும் பொறுப்பு உடையவர்.
இந்தப் பதவியில் இருந்த செந்தமிழ்ச்செல்வி,
2014 ஏப்ரலில் ஓய்வு பெற்றார். அதன் பின், செய்யாறு அரசு கலை கல்லுாரி
முதல்வர் தேவதாஸ், புதிய இயக்குனராக கூடுதல் பொறுப்பில்
நியமிக்கப்பட்டார்.இவரது நிர்வாகத்தில், பேராசிரியர்கள் இடமாறுதல் மற்றும்
அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கு நிதி ஒதுக்குவதில் புகார்கள் எழுந்தன.
அதனால், புதிய இயக்குனரை தேர்வு செய்யும் பணியில் உயர்கல்வி அதிகாரிகள்
ஈடுபட்டனர்.
'பதவி மூப்பு பட்டியலில் முதலில் உள்ளதால்,
தனக்கே கல்லுாரி கல்வி இயக்குனர் பதவியை நிரந்தரமாக வழங்க வேண்டும்;
புதிதாக சேகர் என்பவரை, இயக்குனராக நியமிக்க தடை விதிக்க வேண்டும்'
எனக்கோரி, தேவதாஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இயக்குனர் தேவதாஸ், சில
நாட்களாக, உடல்நலக் குறைவால் விடுப்பு எடுத்து சிகிச்சை பெற்று வந்தார்.
உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூட்டம், நேற்று முன்தினம் அவசரமாகக் கூடி,
புதிய இயக்குனர் பொறுப்புக்கு, பேராசிரியர் சேகரை தேர்வு செய்தது.
இந்த தகவல் நேற்று வரை, விடுப்பில் இருந்த
தேவதாசுக்கு தெரிவிக்கப்படவில்லை. அவர், அரசின் உத்தரவை எதிர்த்து,
மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக, அவரது ஆதரவு
பேராசிரியர்கள் தெரிவித்தனர்.தமிழ்நாடு கல்லுாரி ஆசிரியர் மன்ற பொதுச்
செயலர்,
பா.சிவராமன் கூறியதாவது:கல்லுாரி கல்வி
இயக்குனர் பதவியில் நிரந்தரமாக, தகுதியானவரை நியமிக்க, தமிழக அரசு விரைந்து
நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது. தேவதாஸ் மீது பல புகார்கள்
எழுந்தன. எங்கள் சங்கத்தினரும், அவரை மாற்றும்படி அரசிடம் கோரிக்கை
விடுத்தனர். இதில், அரசு காலதாமதமாகவே முடிவு எடுத்துள்ளது. தற்போது,
பேராசிரியர் சேகருக்கு, நிரந்தர பொறுப்பு அளிக்காமல், கூடுதல் பொறுப்பையே
வழங்கியுள்ளது. எதிர்காலத்திலாவது, இயக்குனர் பதவிக்கு நிரந்தர பணி நியமனம்
செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...