தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரமாக
அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சுதந்திர தினத்தை
ஒட்டி, தலைமைச் செயலகத்தில் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி
வைத்து அவர் ஆற்றிய உரையில் ஓய்வூதியம் உயர்வு தொடர்பான
அறிவிப்பைவெளியிட்டார். அவர் பேசியது:
சுதந்திர போராட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரமாகவும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு அளிக்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரத்து 500 ஆகவும் அதிகரிக்கப்படும். இதன்மூலம், ஆயிரத்து 881 பேர் பயன் அடைவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1.37கோடி கூடுதல் செலவு ஏற்படும்.விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு நாட்டுக்காக சிறப்புற பணியாற்றியவர்களின்தியாகங்களை போற்றும் வகையில், அவர்களது வாரிசுதாரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது.
இதன்படி, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ஆகியோரின் வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனாரின் பேரன் ஆகியோர் பெற்று வரும் சிறப்பு ஓய்வூதியம் ரூ.4 ஆயிரத்து 500-லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். இதன்மூலம், 185 பேர் பயன் அடைவர். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.11.10 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...