Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சென்னையில் நாளை நடக்கிறது: முதுநிலை சட்டப் படிப்பு எல்.எல்.எம். கலந்தாய்வு- சட்டக் கல்வி இயக்குநர் தகவல்

        முதுநிலை சட்டப் படிப்பான எல்.எல்.எம். கலந்தாய்வு சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நாளை நடக்கிறது என்று சட்டக் கல்வி இயக்குநர் நா.சு.சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.

         இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை சட்டப் படிப்பான எல்.எல்.எம். பயிற்றுவிக்கப்படுகின்றன. இந் நிலையில், 2015 - 2016-ம் கல்வி ஆண்டு எல்.எல்.எம். மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு வரும் 26-ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு சென்னை பிராட்வேயில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

கட் ஆப் மதிப்பெண் விவரம்
அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெற்ற விண்ணப் பதாரர்கள் மற்றும் குறிப்பிட்ட கட் - ஆப் மதிப்பெண் இருந்தும் அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் கலந் தாய்வில் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.கலந்தாய்வு நாள் மற்றும் நேரத்தில் மாற்றம் ஏதும் கோர இயலாது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.கட் ஆப் மதிப்பெண் விவரம்ஓசி - 57.933, எஸ்சி (அருந்ததியர்) - 53.129, எஸ்சி - 52.967, எஸ்டி - அனைத்து விண்ணப்பதாரர்கள், பிசி (முஸ்லிம்) - 54.064, பிசி - 53.600, எம்பிசி, டிஎன்சி - 51.967. சிறப்பு பிரிவினர்: மாற்றுத் திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர்) - 47.628, முன்னாள் ராணுவத்தினர் வாரிசு - 52.250.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive