எட்டு
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் 9
புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறை
அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.சட்டப்
பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற
விவாதங்களுக்கு அமைச்சர் மோகன் பதிலளித்து வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் நடப்பாண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பைத் தரும் புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளது.
அதன்படி, கடலூரில் மெரைன் இன்ஜின் பிட்டர் பிரிவும், கோவையில் டிஜிட்டல் போட்டோகிராபர், பரமக்குடியில் சூரிய சக்தி சாதனங்கள் பராமரிப்பு-மகளிருக்கென துணி வெட்டுதல்-தைத்தல் பிரிவுகள், போடியில் எலக்ட்ரீசியன் பிரிவும், அரக்கோணத்தில் மொபைல் போன் தொழில் பிரிவும், திண்டுக்கல்லில் ஏ.சி. தொழில் பிரிவும், திருச்சியில் மின்தூக்கி தொழில் பிரிவும், சேலத்தில் வர்ணம் பூசுபவர் தொழில் பிரிவும் தொடங்கப்படும் என்று அமைச்சர் மோகன் அறிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...