Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்டாம்பூச்சிகள் அழிந்துபோக நீங்களும் காரணமாக இருக்காதீர்!


பட்டாம்பூச்சிகள் அழிந்துபோக நீங்களும் காரணமாக இருக்காதீர்!

    பட்டாம்பூச்சிகளின் உடலில் இயற்கையாக அமைந்துள்ள நிறங்களைக் கண்டு எப்போதாவது சிலிர்த்துப் போனதுண்டா? சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சி அடைந்த இந்தப் பட்டாம்பூச்சிகள் கடந்த நூற்றாண்டில் மட்டும் அதன் நான்கு இனங்களை முற்றிலுமாகவே இழந்து விட்டன.

        நம்மால் பேச முடியும், யோசிக்க முடியும் யோசித்தவற்றைச் செய்ய முடியும் என்கிற எண்ணத்தால் மனிதர்களாகிய நாம் பிற உயிரினங்களை துன்புறுத்துவதைப் பற்றியோ, அவற்றை அழிப்பதைப் பற்றியோ உணர்ந்துகொள்ளாமல், கடந்துபோய் விடுகிறோம்.
பட்டாம்பூச்சிகளைப் பாதுகாப்பதின் அத்தியாவசியத்தை உணர்த்தும் விதமாக கர்நாடகா மாநிலத்தின் துறைமுக நகரமான மங்களூரின் பேல்வாய் பகுதிக்கு அருகில், ‘சம்மில்லான் ஷெட்டி பட்டாம்பூச்சி பூங்கா’ இயற்கை ஆர்வலர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவில், புதிகாக சேர்க்கப்பட்ட பதினெட்டு புதிய பட்டாம்பூச்சி இனங்களுடன் மொத்தமாக நூற்றி முப்பத்தோரு வகை பட்டாம்பூச்சிகளுடன் இயற்கை ஆர்வலர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது. இந்தப் பூங்கா தொடங்கப்பட்டு இரண்டாண்டு நிறைவடைவதையொட்டி வரும் 15, 16-ம் தேதிகளில் பட்டாம்பூச்சிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளது.

அதில், பட்டாம்பூச்சிகளைப் பற்றிய வீடியோக்களும், அரிய உண்மைகளும் இயற்கை ஆர்வலர்களுக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே, நிறைய பேர் தங்களது வீட்டுத் தோட்டங்களில் பட்டாம்பூச்சிகளை வளர்க்க இந்தப் பூங்காவினர் உற்சாகப்படுத்தியுள்ளனர். நம் நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் 339 பட்டாம்பூச்சி இனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive