ஏற்கெனவே இணைய
டிராபிக்கின் கால் பங்கு ஃபேஸ்புக்கம் பக்கம்தான் உள்ளது. அதில் உள்ள
வீடியோக்களால் ஒட்டு மொத்த இணைய சமுதாயமும் ஃபேஸ்புக் பக்கம் மேலும் சாய
வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஃபேஸ்புக் வீடியோக்களால்
பயனர்கள் இன்னும் அதிக நேரம் செலவழிப்பார்கள், இதனால் வர்த்தக நிறுவனங்கள்,
ஃபேஸ்புக் வழியாக தங்கள் வாடிக்கையாளர்களைச் சுலபமாகச் சென்று சேரமுடியும்
என்று கணிக்கப்படுகிறது.
இதுதான்
யூடியூப் - ஃபேஸ்புக் இடையே கருத்துமோதலை உருவாக்கியுள்ளது. யூடியுப்பில்
உள்ள அதிகாரபூர்வமான வீடியோக்கள், அனுமதி இன்றி ஃபேஸ்புக்கில்
பயன்படுத்தப்படுகிறது என்பது யூடியூப் தரப்புக் குற்றச்சாட்டு.
ஃபேஸ்புக்கில் அதிகம் பார்க்கப்படும் பெரும்பாலான வீடியோக்கள்
யூடியூப்புக்கு உரியவை என்று சொல்லப்படுகிறது. யூடியூபில் அதிகாரபூர்வமற்ற
வீடியோக்கள் குறித்து புகார் அளிக்கமுடியும். ஆனால் ஃபேஸ்புக்கில் அத்தகைய
வசதிகள் இல்லை. இதுதான் சர்ச்சையை வரவழைத்துள்ளது.
மேலும் யூடியூப்
வீடியோவை எம்படட் (Embedded) செய்வதுபோல வசதி இருந்தால் பரவாயில்லை. அது
யூடியூப்புக்கு லாபத்தையே அளிக்கும். பல இணையத்தளங்களில் அதுபோன்றுதான்
யூடியூப் வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் ஃபேஸ்புக்கில் அப்படி ஒரு
வசதி கிடையாது. இதனால் யூடியூப்புக்கு பலவிதமான இழப்புகள் ஏற்படுகின்றன.
இதனால் யூடியூபை
விடவும் தங்களது இணையத்தளத்தில் அதிக வீடியோக்கள் பார்க்கப்படுவதாக
ஃபேஸ்புக் சொல்வதைப் பலரும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். முறையில்லாத
வழியில் செயல்படுவதால் இந்தச் சாதனையை ஏற்கமுடியாது என்கிறார்கள்.
அறிவுசார்
சொத்துரிமை (Intellectual Property Rights) என்பது அந்தப் படைப்பு, அதை
உருவாக்கியவரின் அல்லது உருவாக்கிய குழுவின் அறிவுச்சொத்து ஆகும்.
இந்நிலையில் ஃபேஸ்புக், அறிவுசார் சொத்துரிமைத் திருட்டை ஊக்குவிக்கிறது
என்று யூடியூப் நட்சத்திரம் ஹாங்க் க்ரீன் குற்றம் சுமத்துகிறார்.
யூடியூப் வீடியோக்களை எம்படட் முறையில் மட்டுமே ஃபேஸ்புக்
அனுமதிக்கவேண்டும். எனில் எந்தப் பிரச்னையும் இருக்காது என்கிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...