தமிழக அரசு செவிலியர் பட்டயப் படிப்புக்கு 9,401 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 23 செவிலியர் பள்ளிகளில் செவிலிய பட்டயப் படிப்புக்கான சேர்கைக்கு ஜூலை 22-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இணையதளத்திலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் பள்ளிகளில் சுமார் 2,100 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புக்கு மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் படிப்பில் சேருவதற்கு மொத்தம் 10,487 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும்.
இறுதிநாளின் முடிவில் 9,401 நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை- கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர்ந்தன.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, செப்டம்பர் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...