தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
சேலம் மாவட்ட முன்னாள் கலெக்டர் கே.மகரபூஷணம், பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் எம்.சந்திரசேகரன், பிற்படுத்தப்பட்டோர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில அரசுப் பணிக்கு திரும்பியுள்ள ராஜேந்திரகுமார், தொழில்துறை கமிஷனர் மற்றும் தொழிற்சாலைகள், வர்த்தக இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
பேரூராட்சிகள் இயக்குனர் ராஜேந்திர ரத்னூ, பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்படுகிறார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கிரன் குராலா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் மேல்படிப்பை முடித்துத் திரும்பியுள்ள காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மை சந்தை மற்றும் வர்த்தக இயக்குனர் சி.மனோகரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
வணிகத்துறை முன்னாள் இயக்குனர் மங்கத் ராம் சர்மா மாநில அரசுப் பணிக்கு திரும்பியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணமலை மாாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் வருகின்ற திங்கட்கிழமை ( நாள் 31-08-2015 காலை 8.00 மணி) அன்று நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நமது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுப்பதின் காரணத்தால் அடுத்தநாளே சட்ட சபையில் கல்வி மானிய கோரிக்கையில் நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வுகளை நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவிக்க உள்ளதை முன்னிட்டும் கடைசி கவன ஈர்ப்பு மனுவை நமது மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து ஊடகங்கள் வாயிலாக நமது பிரச்சனைகளை களைய அனைத்து பகுதி நேர ஆசிரியப் பெருந்தகைகள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற செய்யுமாறு பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது........ அனைவரும் வாரீர்.....வெற்றியை நிலைப்பெறச் செய்வீர்.......
ReplyDelete