வருமான வரி கணக்கை, கணினி மூலம் தாக்கல்
செய்வது, 80 வயது உட்பட்டோருக்கு கட்டாயம்' என, வருமான வரித்துறை
அறிவித்துள்ளது.வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மதிவாணன் வெளியிட்டுள்ள
அறிக்கை:
நடப்பு
ஆண்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, வரும், 31ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல், ஆண்டு வருமானம்
உள்ள, 80 வயதுக்கு உட்பட்டவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது,
கூடுதல் வரி செலுத்தி திரும்ப பெறுவது போன்றவற்றை, கணினி மூலமே செய்ய
வேண்டும்.
சென்னை வருமான வரி அலுவலக எல்லைக்குள்
இருப்பவர்கள், நுங்கம்பாக்கம் வருமான வரி ஆணையர் அலுவலகத்திலும், தாம்பரம்
அலுவலக எல்லைக் குள் இருப்பவர்கள், தாம்பரம் வருமான வரி சேவை மையத்திலும்,
கணக்குகளை தாக்கல் செய்யலாம்.இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...