நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வழங்கப்படும் தொகை, ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நடுத்தர செலவினங்கள் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி அறிக்கையை தாக்கல் செய்து கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகை, நடப்பு நிதியாண்டில்ரூ.1 லட்சம் கோடியை தாண்டும். அத்து டன், 7-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் போது இந்த செலவினம் மேலும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப் படுகிறது. இதனால் நிதி நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத் தொகை 9.56 சதவீதம் அதி கரித்து ரூ.1 லட்சத்து 619 கோடி யாக அதிகரிக்கும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.வரும் 2016-17-ம் ஆண்டு 7-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால், 15.79 சதவீத அளவுக்கு (ரூ.1.16 லட்சம் கோடி) இந்தத் தொகை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இத் தொகை 2017-2018-ம் ஆண்டில் ரூ.1.28 லட்சம் கோடியாக உயரும்.அதேபோல் ஓய்வூதியதாரர் களுக்கு வழங்கப்படும் தொகை யும் நடப்பு நிதியாண்டில் ரூ. 88,521 கோடியாக உயரும். வரும் 2016-17-ம்ஆண்டில் ரூ.1.02 லட்சம் கோடியாகவும் 2017-18-ம் ஆண்டில் ரூ.1.12 லட்சம் கோடியாகவும் ஓய்வூதியம் வழங்க வேண்டி இருக்கும். இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.7-வது சம்பளக் குழுவின் பரிந்துரைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொடுப்பதுபோல் கொடுத்து வரி என்ற பெயரில் பிடுங்கப் போகின்றீர்கள். எதர்கு இத்தகய விளக்கம்.
ReplyDeletewe will reduced the salary of PRIME MINISTER AND HIS COLLEAGUE'S AND OTHER BENEFITS OF POLITICIANS, NOT PEOPLE THEN ONLY HALF OF THE AMOUNT CAN BE REDUCED.
ReplyDelete