746 பள்ளிகளுக்கு குறைந்த பட்ச நிலத் தேவையினை பூர்த்தி செய்ய வேண்டும்
என்று நிபந்தனையுடன் மே 2016 வரை தற்காலிக அங்கீகாரம் வழங்க அரசு அனுமதி
அளித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு உத்தரவில்
கூறப்பட்டுள்ளதாவது:
தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன்
மேனிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச நிலப்பரப்பு என்பது பள்ளிகள்
அமைந்துள்ள பகுதிகளின் தன்மைக்கு ஏற்ப மாநகராட்சி பகுதியாக இருந்தால் 6
கிரவுண்டு, மாவட்ட தலை நகர் 8 கிரவுண்டு, நகராட்சி 10 கிரவுண்டு,
பேரூராட்சி 1 ஏக்கர், ஊராட்சி 3 ஏக்கர் என நிர்ணயம் செய்து அரசு ஏற்கெனவே
உத்தரவிட்டுள்ளது. ஆனால், மெட்ரிக்குலேஷன் மற்றும் மெட்ரிக்குலேஷன்
மேனிலைப் பள்ளிகளை நடத்துவோர் குறைந்த பட்ச நிலத் தேவையை பூர்த்தி செய்யாத
நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளதாக மெட்ரிக்குலேஷன் இயக்குநர் என்று
அரசுக்கு தெரிவித்தார்.
மேலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஏற்கெனவே துறை அனுமதி
மற்றும் அங்கீகாரம் பெற்று தொடர்ந்து செயல்பட்டு வரும் மெட்ரிக்குலேஷன்,
மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி நிர்வாகங்களுக்கு குறைந்த பட்ச நிலத் தேவை
பூர்த்தி செய்ய ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3
ஆண்டுகளுக்கு கால அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டது.
அதைத் தெடர்ந்து மேற்கண்ட பள்ளிகளுக்கு 31.5.2011வரை தற்காலிக அங்கீகாரம்
வழங்கப்பட்டது. இப்படி கால அவகாசம் அளித்தும் தமிழகத்தில் 746 பள்ளிகள்
குறைந்த பட்ச நிலத் தேவையை பூர்த்தி செய்யாமல் இயங்கி வருகின்றன என்றும்
மெட்ரிக்குலேஷன் இயக்குநர் அரசுக்கு தெரிவித்து இருந்தார். 31.5.2011 உடன்
்அங்கீகாரம் முடிவடைந்த பள்ளிகளில் 512107 மாணவ மாணவியர் படித்து
வருகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டும்,
அவர்களின் சான்றுகளை முறைப்படுத்தும் பொருட்டும் பள்ளிகளுக்கு அங்கீகாரம்
அவசியம் தேவை. எனவே நிலப் பற்றாக்குைற உள்ள 746 பள்ளிகள் இதர அனைத்து
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திருந்தால் குறைந்த பட்ச நிலத் தேவையை
பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் 31.5.2016 வரை தற்காலிக
அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று இயக்குநர் கேட்டுள்ளார்.
மெட்ரிக்குலேஷன் இயக்குநரின் கருத்துருவை அரசு பரிசீலித்து அதை ஏற்று, உரிய
அங்கீகாரம் பெறாமல் பள்ளிகள் செயல்பட இயலாத நிலை உள்ளதையும், பள்ளிக்
கல்வி இயக்குநர் தலைமையில் பள்ளிகள் தொடங்க குறைந்த பட்ச நிலம் நிர்ணயம்
செய்ய அமைக்கப்பட்ட குழு அரசுக்கு அளிந்த பரிந்துரை ஆய்வில் உள்ளதை
கருத்தில் கொண்டும், இடத் தேவையை பூர்த்தி செய்யாததால், உரிய அங்கீகாரம்
வழங்கப்படாமல் செயல்படும் 746 பள்ளிகளுக்கு இதர அடிப்படை தேவைகளை பூர்த்தி
செய்திருந்தால் குறைந்தபட்ச நிலத் தேவையை பூர்த்திி செய்ய வேண்டும் என்ற
நிபந்தனையுடன் 31.5.2016 வரை தற்காலிக அங்கீகாரம் வழங்க மெட்ரிக்குலேஷன்
பள்ளிகள் இயக்குநருக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அந்த
அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
‘‘நகர் மற்றும் ஊரமைப்பு துறை, உள்ளூர் திட்டக் குழுமம், சென்னை பெருநக
வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றில் கட்டிட வரைபட அனுமதி பெற்று சமர்ப்பிக்க
வேண்டும்’’ என்ற நிபந்தனையுடன் 31.5.2016 வரை தற்காலிக தொடர் அங்கீகாரம்
நீட்டித்து வழங்க மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கு அனுமதி அளித்து
அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளின் சங்க கூட்டமைப்பு பாராட்டு
தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்க கூட்டமைப்பின் கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுவது தொடர்பாக பல்ேவறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து கூட்டமைப்பின் செயலாளர்
இளங்கோவன் கூறியதாவது: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்க குறைந்தபட்ச
நிலப்பரப்பு தேவை என்ற அரசின் ஆணை காரணமாக அங்கீகாரம் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்ட பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும்,
தொடர் அங்கீகாரம் நிலுவையில் உள்ளது தொடர்பாகவும் பள்ளிக் கல்வி அமைச்சர்
மற்றும் பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் வலியுறுத்தினோம். இதையடுத்து
அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 746 பள்ளிகளுக்கு 2016 வரை அங்கீகாரம்
வழங்கவும், தொடர் அங்கீகாரம் வேண்டி விண்ணப்பித்துள்ள பள்ளிகளுக்கு
உடனடியாக அங்கீகாரம் வழங்கவும் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கு
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...