பணிபுரியும் மகளிருக்கான பேறுகால விடுமுறையை ஆறு மாதங்களாக உயர்த்தும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான கேள்விக்கு, மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
பேறுகால சலுகைச் சட்டத்தின்படி, பணிபுரியும் மகளிருக்கு தற்போது 12 வாரங்கள்(சுமார் 3 மாதங்கள்) பேறுகால விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இனி, அதை 24 வாரங்களாக (சுமார் 6 மாதங்கள்) உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது.எனினும், ஊழியர்களுக்கான போனûஸ இரட்டிப்பாக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில்இல்லை. அதேபோல், ஊழியர்கள் வேலை மாறும்போது பணிக்கொடைத் தொகையை மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
தற்போது, பணிபுரியும் மகளிருக்கு பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதியிலிருந்து 6 வாரங்களுக்கு முன்பும், பிரசவத்துக்குப் பின்பு 6 வாரங்கள் வரையும் என மொத்தம் 12 வாரங்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.போனûஸப் பொருத்தவரை, ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 8.33 சதவீதமும், அதிகபட்சம் 20 சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...