புதுடெல்லி
: தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 69 சதவீத
இடஒதுக்கீட்டை பின்பற்றுவதை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தொடர்ந்த
வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மாணவி லோகேஷ்வரி உள்ளிட்ட 8 மாணவர்கள்
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், கடந்த
கல்வியாண்டில் நாங்கள் அனைவரும் 12ம் வகுப்பு முடித்து நல்ல
மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றோம். தமிழகத்தில் 69
சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருப்பதால், பொதுப்பிரிவு மாணவர்களாகிய
எங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு தகுதியான மதிப்பெண்
இருந்தும், மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. அனைத்து
மாநிலங்களிலும் 50 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றி எம்பிபிஎஸ் மாணவர்
சேர்க்கை நடைபெறுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் 69 சதவீத
இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதனால் தான் எங்களுக்கு எம்பிபிஎஸ் இடம்
கிடைக்கவில்லை. நாங்கள் எம்பிபிஎஸ் படிக்க அனுமதி வழங்கி உத்தரவிட
வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான
அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்
சிவபாலமுருகன் வாதிடும்போது, தமிழகத்தில் கடந்த 22 வருடங்களாக 69 சதவீத
இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதனால் பொதுப்பிரிவில் உள்ள மாணவர்களுக்கு
மருத்துக் கல்வி படிக்க தகுதியான மதிப்பெண் இருந்தும் இடம் கிடைக்காத சூழல்
உண்டாகிறது. பாதிக்கப்படும் மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து,
அதன்பின் கல்லூரிகளில் சேர்வது சில வருடங்களாக நடக்கிறது. எனவே மனுதாரரான
மாணவர்களுக்கு இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிக்க அனுமதி வழங்கி உத்தரவிட
வேண்டும். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து
செய்ய வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும்
17ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும் அன்று வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...