பட்டதாரி, இடை நிலை ஆசிரியர்கள், 529 பேர், பிற மாவட்டங்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர்; இவர்களுக்கான கலந்தாய்வு, நாளை துவங்குகிறது.
திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள்,
இடை ஆசிரியர்களுக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல் கலந்தாய்வு,
நாளை துவங்குகிறது. திருப்பூர் கே.எஸ்.சி., அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில், 29ல், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளி களில், 6
முதல், 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும்; 30ம்
தேதி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பாடம் நடத்தும், இடைநிலை
ஆசிரியர்களுக்கும், கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை, 10:00 மணிக்கு
துவங்கும் இக்கலந்தாய்வு, ஆன்-லைன் முறையில் நடைபெறும். திருப்பூர்
மாவட்டத்தில் இருந்து, பிற மாவட்டங்களில் பணியாற்ற மொத்தம் 529 ஆசிரியர்கள்
விண்ணப்பித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...