பள்ளி படிப்பை முடித்த அனைவருக்கும் 4 லட்சம் ரூபாய் பெரும் வகையில்
கடன் அட்டை வழங்கப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பிகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி
கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் தொடங்க பாஜக
திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் பாட்னாவில் 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணத்தை முதல்வர்
நிதிஷ்குமார் நேற்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தாம் மீண்டு ஆட்சி அமைத்தால் அரசு வேலைகளில் மகளிருக்கு 35 சதவிகிதம்
ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்த அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி
செலவுக்காக 4 லட்சம் ரூபாய் வரை பேரும் வகையில் 3 சதவிகித அரசு
மானியத்துடன் கூடிய கடன் அட்டைகள் வழங்கப்படும் என்று கூறினார்.
மேலும், மாநிலத்தின் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இலவச வைபை
வசதி, இளம் தொழில் முனைவோர்க்கு நிதி உதவி வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
திருவண்ணமலை மாாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் வருகின்ற திங்கட்கிழமை ( நாள் 31-08-2015 காலை 8.00 மணி) அன்று நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நமது முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுப்பதின் காரணத்தால் அடுத்தநாளே சட்ட சபையில் கல்வி மானிய கோரிக்கையில் நம் வாழ்வாதாரத்தின் முக்கிய நிகழ்வுகளை நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவிக்க உள்ளதை முன்னிட்டும் கடைசி கவன ஈர்ப்பு மனுவை நமது மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து ஊடகங்கள் வாயிலாக நமது பிரச்சனைகளை களைய அனைத்து பகுதி நேர ஆசிரியப் பெருந்தகைகள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று வெற்றிப் பெற செய்யுமாறு பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது........ அனைவரும் வாரீர்.....வெற்றியை நிலைப்பெறச் செய்வீர்.......
ReplyDelete