தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வேலூர் மாவட்டப் பிரிவின் சார்பில்,
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி வேலூரில்
செப்டம்பர் 3-இல் நடைபெறுகிறது.
இந்தப்
போட்டி காவலர் கல்யாண மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது.
இளநிலைப் பிரிவு (மழலை வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை), முதுநிலைப்
பிரிவு (6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை) போட்டிகள் இரு பிரிவாக
நடத்தப்படுகின்றன. போட்டியில் பங்கேற்போர் தலைமை ஆசிரியர்களிடம் இருந்து
பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்றிதழ்களுடன் தங்கள் பெயர்களை
1-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் நேதாஜி விளையாட்டரங்கில் அமைந்துள்ள மாவட்ட
விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பள்ளி அடையாள அட்டைகள்
ஏற்கப்பட மாட்டாது. ஒரு பள்ளியில் இருந்து ஒற்றையர் போட்டியில் 3 பேருக்கு
மிகாமலும், இரட்டையர் போட்டியில் 2 ஜோடிகளுக்கு மிகாமலும் பங்கேற்கலாம்.
மாணவர்கள் தத்தம் பள்ளிச் சீருடையுடன் கலந்து கொள்ள வேண்டும். மதிய உணவு,
தினப்படி, பயணப்படி ஆகியன வழங்கப்பட மாட்டாது. வெற்றி பெறுவோருக்கு
பரிசுகள், சான்றிதழ்கள் மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.
இந்தத் தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர் அ.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...