Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

3500 ஆசிரியர்களுக்கு விரைவில் பின்னேற்பு ஆணை

     SSTA மாநில ,மாவட்டபொறுப்பாளர்கள் கல்வித்துறை அமைச்சர் ,செயலர்,இயக்குநர் ,SPD சந்திப்பு!!! (3500 ஆசிரியர் களுக்கு விரைவில் பின்னேற்பு ஆணை)
    கடந்த 05.8.15, 06.8.15 ஆகிய இரு நாட்களில் கல்வித்துறை அமைச்சர்,கல்வித்துறை செயலாளர்,தொடக்க கல்வி இயக்குநர்,அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் ஆகியோர்களை SSTA- வின் மாநில நிர்வாகிகள் சந்தித்த விபரங்கள்:

                              
                          *கல்வித்துறை அமைச்சரை சந்தித்து  இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய
பிரச்சினையை மட்டும் முன் வைத்து(7 கோரிக்கைகள்  அல்ல 72 ம் அல்ல ஒன்றே ஒன்று தான்) முழுவிபரங்களை நியாயமான நமது கோரிக்கைகளை அரசாணை மற்றும், ஆதாரங்களுடன் சுட்டி காட்டி வலியுறுத்தப்பட்டது. அரசு தரப்பில் கூறப்படும் தவறான தகவலும் எடுத்துரைக்கப்பட்டது.விரைவில் ஊதிய முரண்பாட்டினை தீர்க்கவும் வலியுறுத்தப்பட்டது!!!.
SSTA மகிழ்ச்சி!!!
    அடுத்ததாக கல்வித்துறை முதன்மை செயலரை சந்தித்து மலைச்சுழற்சியினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தீர்வுகாண வலியுறுத்தப்பட்டது.
CRC யில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்காத ஒன்றியங்களின் பெயர்களை குறிப்பிட்டு வழங்கப்பட்டது.
                                                                        *கடந்த 8 மாதமாக SSTA தொடர் கோரிக்கையாக வைக்கப்பட்டு அதன் மூலம் ,பல ஒன்றியங்களிலுள்ள 3500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ,பின்னேற்பு வழங்க பட்டியல் கல்வித்துறை   முதன்மை செயலாளர் அவர்களின் அனுமதி பெற இயக்குயரகத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. (2007 க்கு பின் தற்போது தான் இதுபோன்று அரசின் அனுமதிக்கு சென்றுள்ளது) SSTA -வின் தீவிர மற்றும் விடா முயற்சியால் கிடைக்க போகிற வெற்றி என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
*அடுத்து தொடக்க கல்வி இயக்குநரை சந்தித்து கலந்தாய்வில்(மாவட்ட மாறுதலுக்கு) இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற்றால் ஒருபக்க படிவத்தினால் ஏற்படும் நடைமுறைசிக்கல்களை இயக்குநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
*மலை சுழற்சி ஒன்றியங்களில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அவர்கள் ஓய்வு பெறும்வரை பிற மாவட்டங்களில் செல்ல முடியாது.ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் மலைச்சுழற்சி  பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வருடம் மட்டுமே முன்னுரிமை கிடைப்பதால் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தியாக மனப்பான்மையோடு பணியாற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு அரசாணை எண்404 ல் மாற்றம் செய்திட கடந்த 6 மாதமாக தொடர்ந்து SSTA வலியுறுத்தி வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டது.
*இந்த ஆண்டு பணி நிரவல் அதிகமாக இருக்குமென்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதால் பணிநிரவலில் வேறுபள்ளிகளுக்கு செல்கின்றவர்களுக்கும் ஏற்கனவே பணிநிரவலில் சென்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
*அடுத்து அனைவருக்கும் கல்விதிட்ட இயக்குநர் அவர்களை சந்தித்து 15-16 கல்வி ஆண்டுக்கான  CRC பயிற்சிகளை முன்கூட்டியே தெரிவித்தல்,CRC பயிற்சியில் கலந்து கொண்ட தொடக்க பள்ளி ,ஆசிரியர்களுக்கு வருகைச் சான்று வழங்குதல் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள பட்டது.SPD அவர்களும் அதற்கு உரிய முறையில் செய்து தருவதாக கனிவோடு தெரிவித்தார்கள்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive