'மத்திய இடைநிலை கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ.,யின், ஒரு பெண்
குழந்தைக்கான கல்வி உதவித் தொகை பெற, செப்., 30க்குள் விண்ணப்பிக்க
வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10ம் வகுப்பு முடித்த
மாணவியருக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில்,
குடும்பத்தில், ஒரே ஒரு பெண் குழந்தையாக இருக்கும் மாணவி யருக்கு, பிளஸ் 2
வரை, மாதம், 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை பெற, மாணவியர், 10ம் வகுப்புத் தேர்வில், 60 சதவீதம்
அல்லது, 6.2 என்ற தரவரிசை பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதி உள்ளவர்கள்,
http://cbse.nic.in/ இணைய தளம் மூலம், 'ஆன் - லைனில்' செப்., 30க்குள்
விண்ணப்பிக்கலாம். 'ஆன் - லைன்' பதிவுக்கு பின், ஆவணங்களை, அக்., 15க்குள்,
டில்லியிலுள்ள சி.பி.எஸ்.இ., அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.இத்தகவலை
சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...