அடுத்த மாதம், 2ம் தேதி நடைபெறும், நாடு தழுவிய வேலைநிறுத்தப்
போராட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களும் பங்கேற்பதால், கடை திறப்பதில் சிக்கல்
ஏற்பட்டு உள்ளது.
பல்வேறு சங்கங்களும் ஒன்றிணைந்து, பல கோரிக்கைகளை வலியுறுத்தி,வரும்,
2ம் தேதி, அகில இந்திய அளவில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
இந்தப் போராட்டத்தில், ரேஷன் கடை ஊழியர்களும் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத் தலைவர்
ராஜேந்திரன் கூறியதாவது:அரசு நிறுவனங்களில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு
மட்டுமே குறைந்த சம்பளம் தரப்படுகிறது. இதை உயர்த்தும்படி, பலமுறை கோரிக்கை
விடுத்தும் பலனில்லை. தற்போது, சட்டசபை கூட்டம் நடக்கிறது. அதனால், அரசின்
கவனத்தை ஈர்க்கும் வகையில், 2ம் தேதி, ரேஷன் கடைகளை பூட்டி விட்டு,
நாங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விடுப்பு எடுப்பது ஊழியர்கள்
விருப்பம். மாதத்தின் முதல் வாரத்தில், அதிகம் பேர் ரேஷன் கடைகளுக்கு
வருவர் என்பதால், போராட்டத்தில் பங்கேற்காதகூட்டுறவு சங்க பிற ஊழியர்கள்
மூலம், 2ம் தேதி, வழக்கம் போல ரேஷன் கடைகள் திறக்கப்படும். இவ்வாறு அவர்
கூறினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...