டிப்ளமோ இன்ஜினியரிங்கில், இரண்டு ஆண்டு படிப்பை நீக்க, கல்லுாரிகளுக்கான
தேசிய அங்கீகார வாரியமான - என்.பி.ஏ., முடிவு செய்துள்ளது. தரம்
உயர்த்தப்பட்ட புதிய டிப்ளமோ படிப்பு குறித்த, வரைவு திட்டத்தையும்
அறிவித்துள்ளது.
நம்நாட்டில், இன்ஜினியரிங் படிப்பு, இளநிலையில், நான்கு
ஆண்டு; முதுநிலையில் இரண்டு ஆண்டு நடத்தப்படுகிறது. டிப்ளமோ இன்ஜி.,
படிப்புகள் பாலிடெக்னிக் கல்லுாரிகள் மூலம் நடத்தப்படுகின்றன. இந்த
படிப்புகள், பல அடுக்கு முறைகளில் உள்ளன.இதன்படி, 10ம் வகுப்பு முடித்த
மாணவர்களுக்கு, மூன்று ஆண்டு; பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டு;
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறைகளில் உள்ளவர்களுக்கு பயிற்சி
அடிப்படையில், டிப்ளமோ இன்ஜி., படிப்புகள் நடத்தப்படுகின்றன.
முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிலையிலுள்ள, இந்த பல அடுக்கு டிப்ளமோ
படிப்புகளில், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தேவைக்கு ஏற்ப
மாற்றம் கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அகில இந்திய
தொழில்நுட்ப கல்வி கவுன்சிலையும் கட்டுப்படுத்தும் அமைப்பான, என்.பி.ஏ.,
புதிய வரைவு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன்படி, டிப்ளமோ, இரண்டு ஆண்டு
படிப்பை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிப்ளமோ இன்ஜி., படிப்பு, மூன்று
ஆண்டுகள் கட்டாயம் என்ற அடிப்படையில், பாடத்திட்டம் மற்றும் தேர்வு
முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
மேலும், 'கிரேடு' எனப்படும் தர அடிப்படையில், மதிப்பெண் வழங்கவும்,
தொழிற்சாலைகளில் நேரடி செய்முறை பயிற்சி தரவும், வரைவு திட்டத்தில் பல
அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வரைவு திட்டத்தை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உள்ள அம்சங்கள்
குறித்து, கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்,
இணையதளம், http:/www.nbaind.org/views/Home.aspx மூலம், கருத்துக் கூறலாம்
என, அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...