பெங்களூரு: மாநகராட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, சில தனியார்
பள்ளிகள், 'ஓட்டளியுங்கள் - மதிப்பெண் பெறுங்கள்' என்ற திட்டத்தை
செயல்படுத்தி உள்ளது. கல்வி ஆய்வு மையம் மற்றும் தனியார் பள்ளிகளின்
நிர்வாக கூட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து, 'ஓட்டளியுங்கள் - மதிப்பெண்
பெறுங்கள்' என்ற திட்டத்தை செயல்படுத்திஉள்ளன.
இந்த திட்டத்தின் படி, பள்ளி மாணவர்களின் பெற்றோர், வரும், 22ம் தேதி நடக்கும் மாநகராட்சி தேர்தலில் ஓட்டுப் போட்டால், மாணவர்களுக்கு இரண்டு மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் பெற்றோர், ஓட்டுப் போட்டு விட்டு, அடையாள மை இருக்கும் கை விரலை பள்ளியில் காட்ட வேண்டும்.
அவ்வாறு செய்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு, இரண்டு மதிப்பெண் கிடைப்பது உறுதி. இதற்காக, சில பள்ளிகள், 22ம் தேதியன்று, பள்ளியில் தனி கவுன்டர் திறக்கவும் தீர்மானித்துள்ளன.தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பு முதன்மை செயலர் சசிகுமார் கூறுகையில், “படிக்காதவர்களை விட, படித்தவர்களே ஓட்டுப் போடுவதில் பின்தங்கி இருக்கின்றனர். இதனால் ஓட்டு சதவீதம் குறைகிறது. அதனால், ஓட்டுப்போடுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, 'ஓட்டுப் போடுங்கள் - மதிப்பெண் பெறுங்கள்' என்ற திட்டத்தை துவங்கிஉள்ளோம்,” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...