தமிழ்நாடு
அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் நடைபெறும்
தட்டெழுத்து தேர்வுகள் இம் மாதம் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறுகிறது.
இது
குறித்து தமிழ்நாடு தட்டெழுத்து-கணினி பள்ளிகள் சங்கத்தின் மாநிலச்
செயலாளர் சோம சங்கர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆண்டு
தோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக்
கல்வி இயக்குநரகம் தட்டெழுத்துத் தேர்வினை நடத்துகிறது. 29-ம் தேதி
(சனிக்கிழமை) தட்டெழுத்து இளநிலைத் தேர்வு நான்கு அணிகளும், 30-ம் தேதி
(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஐந்தாவது அணிக்கும் தேர்வு
நடைபெறுகிறது. 30-ம் தேதி காலை 10.20 மணிக்கு தட்டெழுத்து முதுநிலைத்
தேர்வுகள் தொடங்கி மூன்று அணிகளாக நடைபெறுகிறது.
29-ம்
தேதி தட்டெழுத்து ஆங்கிலம் உயர்வேகத் தேர்வு 10.20 மணிக்கு தொடங்கி 10.30
மணி வரையிலும், தட்டெழுத்து தமிழ் உயர்வேகத் தேர்வு நண்பகல் 12.10
மணிக்குத் தொடங்கி 12.20 வரையிலும் நடைபெறுகிறது.
மேலும்
30-ம் தேதி மாலை 3.50 முதல் 4 மணி வரையிலும், 4.30 மணி முதல் 4.40
வரையிலும் புதுமுக தட்டெழுத்துத் தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழ் இரு
அணிகளாக நடைபெறுகிறது.
தமிழ்நாடு
அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் இந்தத் தேர்வுகள்
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 98 மையங்களில் நடைபெறுகிறது என அவர்
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...