Home »
» முதுநிலை சட்டப் படிப்பு: ஆக.26-இல் கலந்தாய்வு
அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் முதுநிலை சட்டப் படிப்பு
(எல்.எல்.எம்.) சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற
உள்ளது. இதுகுறித்து சட்டக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி:
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, மதுரை
அரசு சட்டக் கல்லூரி, திருச்சி அரசு சட்டக் கல்லூரி, கோவை அரசு சட்டக்
கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி ஆகியவற்றில் வழங்கப்படும்
எல்.எல்.எம். முதுநிலை சட்டப் படிப்பில் 2015-16 கல்வியாண்டு மாணவர்
சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில்
ஆகஸ்ட் 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்த
மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் தனியே அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக்
கடிதம் கிடைக்கப் பெறாதவர்களும் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில்
பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...