ஆகஸ்ட் 24-ம் தொடங்கி செப்டம்பர் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.மானியக் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை வரும் 24-ம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை:
கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது நடந்த அமளி காரணமாக, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தவிர தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரும் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். இதனால், இந்தக் கூட்டத்திலும் அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தேமுதிக உறுப்பினர்களை இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.அதேபோல், முக்கிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 2 நாட்களுக்கு நடைபெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்குப் பிரச்சினை:
தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் நடந்தது குறித்து பேரவையில் பேச திமுக உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன. மேலும், குடிநீர் தட்டுப்பாடு, சூரியஒளி மின் கொள்முதல், மேகேதாட்டு அணை விவகாரம்உள்ளிட்ட பிரச்சினைகளும் எழுப்பப்படும் என தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...