சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி, மே 23-ந்தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றதும் தமிழக சட்டப்பேரவை கூட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால்
உடனடியாக ஆர்.கே.நகர் தொதி இடைத்தேர்தல் நடைபெற்றதால் அதில் முழு கவனம் செலுத்தப்பட்டு முதல்வர் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.இதையடுத்து ஜூலை மாதம் சட்டப்பேரவை கூட்டப்படும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தேர்தல்முடிந்து 40 நாட்கள் ஆகியும் சட்டப்பேரவை கூட்டம் நடை பெறவில்லை. தமிழகத்தில்மதுவிலக்கை அமல்படுத்த கோரி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில் சட்டப்பேரவையை கூட்டி இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என முக்கிய எதிர்கட்சிகள் வலியுறுத்திவந்தனர்.
ஆயினும் இதுவரை சட்டப்பேரவை கூட்டபடுவதற்கான எந்த முகாந்தரமும் இல்லை. முன்னதாககடந்த மார்ச் 25-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.இனி எப்போது கூடும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில் வரும் 21ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டப்படும் என ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...