டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: தமிழக சுகாதாரத்துறையில்
இதுவரை தாய்சேய் நல மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பட்டு வந்தன.
முதல்முறையாக இந்த பணியிடங்களை நிரப்பி தருமாறு சுகாதாரத்துறை
டிஎன்பிஎஸ்சியை கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து தாய் சேய் நல மருத்துவ
அலுவலர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
தற்போது காலியாக உள்ள 89 காலி பணியிடங்கள் நிரப்பப்பட
உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி. நர்சிங் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க
வேண்டும். தேர்வுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க
வேண்டும். ஏற்கனவே, நிரந்தர பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி
விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை
உள்ளீடு செய்து அப்பதவிகளுக்கு உரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நிரந்தர பதிவு செய்யாத விண்ணப்பதாரர் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு
செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப
கட்டணத்திலிருந்து மட்டுமே விலக்களிக்கப்படும். விண்ணப்பக்கட்டணம், தேர்வு
கட்டணங்களை வங்கிகள், அஞ்சலகங்கள் மூலம் செலுத்த ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி
நாள். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட்
20ம் தேதி தேதி கடைசி நாள். எழுத்து ேதர்வு செப்டம்பர் 20ம் தேதி காலை 10
மணி முதல் 1 மணி வரை நடைபெறும். இத்தேர்வுக்கு நர்சிங் மற்றும் பொது
அறிவில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வு குறித்த மேலும் கூடுதல்
விவரங்களை டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in, www.tnpscexams.netல்
பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...