எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தங்கள் கல்வி
நிறுவனங்களில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்புப் பதிவு செய்து
கொள்ளலாம்.
எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சிப் பெற்றவர்களுக்குப் பள்ளிகளில்
மதிப்பெண் சான்று வழங்கப்பட்டு, வேலைவாய்ப்புப் பதிவு செய்யும் பணி
ஆக.5ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை,
செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன்
மாணவர்கள் ஆக.19ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளிக்குச் சென்று,
வேலைவாய்ப்புப் பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்திலும் பதிவு
செய்து கொள்ளலாம்.
ஆக.5ஆம் தேதி முதல் ஆக.19ஆம் தேதி வரையிலான காலத்தில் பதிவு
செய்யும் மாணவர்களுக்கு ஆக. 5ஆம் தேதி பதிவு மூப்பு தேதியாக
வழங்கப்படும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...