Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சுதந்திரம் வழங்க ஆகஸ்டு 15–ந் தேதி தேர்வானது எப்படி?

சுதந்திரம் வழங்க ஆகஸ்டு 15–ந் தேதி தேர்வானது எப்படி?
சுதந்திரம் வழங்க ஆகஸ்டு 15–ந் தேதி தேர்வானது எப்படி? என்பது குறித்த தகவல் வெளியானது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் இருந்து இந்தியாவுக்கு 1947–ம் ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் வழங்க ஆகஸ்டு 15–ந் தேதியை ஆங்கிலேயர்கள் தேர்ந்தெடுத்தது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
 
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு முடிவு செய்து அதன் பொறுப்பை கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் ஒப்படைத்தது. அவர் 1947–ம் ஆண்டு ஜூன் 17–ந் தேதி அதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

அது பற்றிய குறிப்புகளை ஜவகர்லால் நேருவிடம் வழங்கினார். அதற்கு முன்னதாக அது குறித்து எதுவும் அறிந்திராத நேரு அந்த குறிப்பை படித்து பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அந்த புதிய திட்டப்படி பஞ்சாப் மற்றும் வங்காளம் இன்றி இந்திய எல்லைகள் வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் முகமது அலி ஜின்னா இந்த பகுதிகளுடன் பாகிஸ்தானை பெற்று கொண்டார். குர்தாஸ் பூரும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்தது. இவற்றுக்கு நேரு எதிர்ப்பு தெரிவித்தார்.
காஷ்மீரையும் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெரோஸ்பூருக்கும் இதே நிலைதான் இருந்தது. அதையும் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என வற்புறுத்தினர். அதை தொடர்ந்து மக்கள் தொகை அடிப்படையில் பஞ்சாப், மே.வங்காளம் மற்றும் குர்தாஸ்பூர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.
ஜூன் 3–ந் தேதி சுதந்திரம் வழங்குவதற்கான இறுதி திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்காக அன்று பத்திரிகையாளர் கூட்டம் நடந்தது. அதில் 300 நிருபர்கள் கலந்து கொண்டனர்
அப்போது நிருபர் ஒருவர் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இந்தியாவுக்கு எந்த தேதியில் சுதந்திரம் வழங்குவீர்கள் என கேட்டார். அதற்கு அவர் எந்தவித தயக்கமும் இன்றி ஆகஸ்டு 15–ந் தேதி என பதில் அளித்தார்.
லார்ரி கோலின்ஸ் மற்றும் டொமினிக் லபிரே ஆகியோர் எழுதிய ‘நள்ளிரவில் சுதந்திரம்’ (பீரிடம் அட் மிட் நைட்) என்ற புத்தகத்துக்கு மவுண்ட் பேட்டன் பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தியாவுக்கு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் சுதந்திரம் வழங்க நினைத்தேன்.
அதையடுத்து ஆகஸ்டு 15–ந் தேதி சுதந்திரம் வழங்க முடிவு செய்தேன். ஏனென்றால் அன்றுதான் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரண் அடைந்த 2–ம் ஆண்டு நினைவு நாளாகும்.
குண்டு வீச்சு தொடர்பான நாளன்று சுதந்திரம் வழங்குவதை கோடிக்கணக்கான இந்துக்கள் விரும்பவில்லை. ஆகஸ்டு 15–ந் தேதி அன்று சுதந்திரம் வழங்குவதாக அறிவித்ததற்கு ஆச்சரியமும், கடும் பீதியும் அடைந்தனர். ஏனெனில் ஆகஸ்டு 15–ந் தேதியை அபசகுண நாளாகவும், ஏளனம் செய்வதாகவும் கருதினர்.
மேற்கத்திய முறைப்படி ஆகஸ்டு 15–ந் தேதி நள்ளிரவு பிறக்கிறது. எனவே இரவு 12 மணிக்கு இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்து பஞ்சாங்கப்படி அன்று மங்கலகரமான நாளாகவும் அமைத்தது.
ஆனால், நேருவும், படேலும் சாஸ்திர ரீதியாக அதற்கு ஒரு வழி கண்டனர். ஆகஸ்டு 14–ந் தேதி மதியம் நேரு பாராளுமன்றத்தை கூட்டினார். கூட்டத்தொடரை நள்ளிரவு வரை தொடர்ந்து நடத்தினார். இதன் மூலம் ஆகஸ்டு 15–ந் தேதி இந்தியா சுதந்திர பெற்ற நாளாக அறிவிக்கப்பட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive