தமிழகத்தில்
கடந்த 3 ஆண்டுகளாக சாரணர் இயக்கம் சார்பில் வழங்கும் 'ராஜ்ய புரஸ்கார்'
எனும் கவர்னர் விருது வழங்காமல் கிடப்பில் உள்ளது. இதற்காக ஆயிரத்து 500
மாணவர்கள் காத்திருக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் இவ்விருதுக்கான
எழுத்து தேர்வு நடத்தப்படும். 13 வயதுக்குட்பட்ட 8, 9ம் வகுப்பு மாணவர்கள்
தேர்வில் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் சென்னையிலுள்ள
சாரணர் இயக்க தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
தலைமை
அலுவலக ஏற்பாட்டில் தமிழக ஆளுநரால் விருது வழங்கும் நிகழ்ச்சி செப்டம்பர்
அல்லது அக்டோபரில் நடக்கும். விழாவில் குறிப்பிட்ட நான்கு பேருக்கு கவர்னர்
விருது வழங்குவார்.எஞ்சியவர்களுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஏற்பாட்டின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விருது வழங்கப்படும். கடந்த 3
ஆண்டாக இந்த விருது வழங்கப்படவில்லை.
தமிழகம் முழுவதும் விருதுக்கு தேர்வான 1,500க்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் இவ்வாண்டு விருதுக்கான எழுத்துத்தேர்விற்கு தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்கின்றனர். 3 ஆண்டுக்கான பட்டியல் கிடப்பில் உள்ளதால் இவ்வாண்டுக்கான தேர்வு நடத்த தயக்கம் உள்ளது. சாரணர் இயக்கத்தின் தலைமை அலுவலகம் தமிழக கவர்னரிடம் உரிய தேதியை பெற்று விருது வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...