இடமாறுதல் கலந்தாய்வு மூலம், 1,230 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிதாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், 50 மாவட்ட கல்வி அதிகாரிகள், பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
ஒரு வாரமாக தொடரும் கலந்தாய்வில், மேல்நிலைப் பள்ளிகளில், 430 பேர் பதவி உயர்வு மூலமும், 800 தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் மூலமும், 1,230 பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதவிர, பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கு, 360 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு, பதவி உயர்வு பட்டியலில், ஒன்று முதல், 450 பேர் வரையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
இதேபோல், 50 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கும், பட்டியல் தயார் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதேநேரம், தொடக்க கல்வியில், 45 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் பணிகளில், 20 இடங்களே நிரம்பின; இன்னும், 25 இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த இடங்களிலும், புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...