ஸ்மார்ட் நகரங்கள் என்றால் அனைத்து விதமான கட்டமைப்பு- பொருளாதார, நிதி,
சமுதாய மற்றும் உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகர
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டமாகும்.
தமிழகத்தில்
��மதுரை
��கோவை
��சென்னை,
�� வேலூர்,
�� சேலம்,
��திருப்பூர்
��திருச்சி
�� திண்டுக்கல்,
��தஞ்சை,
��தூத்துக்குடி,
��திருநெல்வேலி,
��ஈரோடு
ஆகிய நகரங்கள் தேர்வு
தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் உலகத்தரத்திலான உள்கட்டமைப்புகள், நிலையான
சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த தீர்வுகள் வழங்குவதற்காக அடுத்த
ஐந்தாண்டுகளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும்.
ஸ்மார்ட் நகரங்கள் ஏற்படும் நன்மைகள் என்ன
ஸ்மார்ட் நகரங்கள் உருவாவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரம் மேம்பாடு உள்ளிட்டவை பற்றி விரிவாக பார்ப்போம்.
��பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சியை விரைவுபடுத்தும் விதமாக இந்தத்
திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்ய உள்ளது.
��இதன்மூலம் ஒவ்வொரு ஸ்மார்ட் நகரத்திற்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்
கிடைக்கும். இதற்கான நகரங்கள் போட்டி மூலம் தேர்ந்து எடுக்கப்படும்.
��இருக்கும் சொத்துக்கள், வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு
தூய்மையான, வசதிகள் நிறைந்த ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.
��இதில் பங்கேற்கும் குடிமக்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.
��ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தூய்மையான
தண்ணீர், கழிப்பிட வசதி, திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து வசதி,
ஏழைகளுக்கு வீட்டு வசதி, மின் வசதி, மின்னணு ஆளுமை உள்ளிட்டவற்றுக்கு
முன்னுரிமை வழங்கப்படும்
��இதே போன்று, பொதுமக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, நிலையான நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
��அடிப்படை சேவைகள், குழந்தைகளின் தேவைகள், மழைநீர் வடிகால் அமைப்பு, பசுமையை பாதுகாக்க பூங்காக்கள் ஆகியவை நிறைவேற்றப்படும்.
��நகர்ப்புற சீர்திருத்தத்தை மேற்கொள்ளும் வகையில், மின் ஆளுமை தொழில்முறை
நகராட்சி பணிநிலை, நகராட்சி வரி மதிப்பீடு நகர்ப்பகுதிகளில்
சீர்திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
��அடல் மிஷன் எனப்படும் அம்ருத் திட்டம் மூலம் 500 நகரங்களில் வளர்ச்சி திட்டங்கள் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
��சில முக்கிய நதிகள், மாநில தலைநகரங்கள், முக்கிய நகரங்கள், மலை பகுதிகள்,
சுற்றுலா மையங்களை ஒட்டி ஸ்மார்ட் நகரங்கள் ஏற்படுத்தப்படும்.
��10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் திட்டத்திற்கு மத்திய அரசு 50
சதவிகிதமும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான
திட்டத்திற்கு மூன்றில் ஒரு பங்கும் மத்திய அரசின் பங்களிப்பாக இருக்கும்.
��இதற்கான மத்திய அரசின் நிதியுதவி மூன்று தவணைகளாக அளிக்கப்படும்.
��நூறு ஸ்மார்ட் நகரங்களை அமைப்பதன் மூலம் கிராமங்கள் – நகரங்கள் இடையே உள்ள இடைவெளி குறையும்.
��ஏழை மக்களின் பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகிய நோக்கங்களும் நிறைவேறும் என்பது மத்திய அரசின் உறுதியான நம்பிக்கை ஆகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...