அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 'பரஸ்பர' இட
மாறுதலுக்கான அறிவிப்பை மாநில திட்ட இயக்குனரகம் அறிவித்துள்ளது. 2015--16
கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ். ஏ.,) திட்டத்தில்
பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்றுநர்கள் 'பரஸ்பர' இடமாறுதல் பெற
வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இரு நகல் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள அனைவருக்கும்
கல்வி இயக்க அலுவலகத்தில் பெற்று நெறி முறைகளை பின்பற்றி ஆக.,11க்குள்
மாநில திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி
வைக்க வேண்டும்.விதிமுறை: பரஸ்பர மாறுதலுக்கு சம்மதம் தெரிவிக்கும்
ஆசிரியர் பயிற்றுநர்கள் மாறுதல் கோரும் புதியபணியிடத்தில் 3 ஆண்டுக்கு மேல்
பணிபுரிந்திருக்க கூடாது (ஏற்கனவே பணிபுரிந்த ஒன்றியத்திற்கு மீண்டும்
மாறுதல் கோர இயலாது).
ஜனவரி 2015ல் நிர்வாக காரணமாக மாறுதல் அளிக்கப் பட்டவர்களும் மாறுதலுக்கு
விண்ணப்பம் கொடுக்கலாம். மாறுதல் கோருவோர் ஒரே பாடப்பிரிவை சார்ந்தவர்களாக
இருக்க வேண்டும்.
இத் தகவலை மாநில திட்ட இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Bt Asst Social who wants mutual transfer from & near Madurai to Kayathaar GHSS Tuticorin Dist (Near Tirunelveli) can contact 9688947422
ReplyDeleteBt Asst Social மதுரை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறுக்கு ( திருநெல்வேலிக்கு மிக அருகில் )Mutual Transfer வேண்டுவோர் 9688947422 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.