Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பு

          கல்வித்துறையில், 3,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் என்ற பெயரில், இன்று பணிமாறுதல் வழங்கப்பட உள்ளது. அதனால், 10ம் வகுப்பு மாணவர்கள் கடுமையாக பாதிப்பட வாய்ப்பு உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
           பள்ளிக் கல்வித்துறையில், தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பணி மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இன்று முதல், 28ம் தேதி வரை, 6 முதல், 10ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், 3,000 பேருக்கு பணி நிரவல் என்ற பெயரில், பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது.

இதில் வெளிப்படைத் தன்மை இல்லை; பணி நிரவலுக்காக, மாணவர் எண்ணிக்கை விகிதப்படி, ஆசிரியர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதில் பெரும் குளறுபடி நடப்பதாக, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:பத்தாம் வகுப்பு அறிவியலில், செய்முறை பயிற்சியை அறிமுகப்படுத்தி உள்ளனர். ஆனால், பல இடங்களில் அறிவியல் ஆசிரியர்களை உரிய விதிகளின்படி நியமனம் செய்யவில்லை. மேலும், தற்போதைய மாணவர் சேர்க்கைப்படி, எண்ணிக்கையை சரியாக கணக்கிடுவதில்லை. பல ஆண்டு களுக்கு முந்தைய கணக்கின்படி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயித்து, தங்கள் விருப்பத்துக்கு பணி நிரவல் என, 'டிரான்ஸ்பர்' நடக்கிறது.

இதனால், அரசு பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களுக்கு, கூடுதல் ஆசிரியர்கள்; சில இடங்களில் குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லாத சூழல் ஏற்படும். எனவே, பல பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கே ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். காலாண்டு தேர்வு நடக்கும் நிலையில், ஆசிரியர்களை, 'டிரான்ஸ்பர்' செய்வது, கற்பித்தல் பணியில் ஆர்வக்குறைவை ஏற்படுத்தும்




7 Comments:

  1. Don't act smartly I'm also a govt teacher if you feel about 10th student means then why you people forced to change three year norms and forced to conduct counseling and then what about promotion places

    ReplyDelete
  2. See the director proceedings which is dated as 24/08/15 it's says surplus is going to calculate based on 01/08/2015 and
    Surplus is surplus so no student going to affect instead student will get benefit from this those who are not having teachers

    ReplyDelete
  3. Replies
    1. நல்ல பதிவு உங்களுக்கும் எனக்கும் ஏதாவது சண்டை உள்ளதோ
      நான் என்னுடைய கருத்துகளை சொன்னால் நீங்கள் உங்கள் எதிர் கருத்துகளை பதிவிடுங்கள் தவறான மொழி சொல்ல வேண்டாம் திரு சீனிவாசன் அவர்களே

      Delete
  4. பணம் இருந்தால் எல்லாம் நடக்கும்
    கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இந்த நிலையில் வெளிப்படையாக vacant ஐ காட்ட சொலலுங்கள்

    ReplyDelete
  5. பணம் இருந்தால் எல்லாம் நடக்கும்
    கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இந்த நிலையில் வெளிப்படையாக vacant ஐ காட்ட சொலலுங்கள்

    ReplyDelete
  6. சரியாக சொன்னீர்கள் பஷிர் பணம் கொடுத்து இடமாற்றம் பெற்ற காரணத்தினால் தான் இந்த நிலை

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive