அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2
வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது தொடர்பான தலைமையாசிரியர்களுக்கான
சிறப்பு பயிற்சி முகாம் 5 தினங்கள் நடைபெற்றன.திருநெல்வேலி
மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் நிகழ் கல்வி ஆண்டில் 10
ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்
என்ற அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கான தலைமை பண்பு குறித்த சிறப்பு
பயிற்சி முகாம் 5 தினங்கள் நடைபெற்றன.
வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல்
கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று முதன்மை கல்வி
அலுவலர் இரா. சுவாமிநாதன் பேசியதாவது: தலைமையாசிரியர்கள் தங்களுக்கு
கிடைக்கும் பயிற்சிகள் மூலம் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிரச்னைகளுக்கு தீர்வு உண்டு என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.நிகழ்
கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத இலக்கை அடைய
வேண்டும். அதற்காக இப்போதே ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
பயிற்சியில் பங்கேற்ற தலைமையாசிரியர்களுக்கு
சான்று வழங்கப்பட்டது. விழாவில் திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர்
எடிசன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ச. ஆவுடையப்ப குருக்கள், பயிற்சி
கருத்தாளர்கள் சேதுசொக்கலிங்கம், ராமர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உதவி
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் வரவேற்றார். மைலப்பபுரம் அரசு
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சுடலை நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...