'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான, உச்ச வயது வரம்பை, 45 வயதாக உயர்த்த வேண்டும்' என,
தமிழக குரூப் 1 தேர்வர்கள் கூட்டமைப்பு, கோரிக்கை விடுத்துள்ளது.
பாதிப்பு
இது தொடர்பாக, கூட்டமைப்பு சார்பில், முதல்வருக்கு அனுப்பி உள்ள, மனுவில்
கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள், பெரும்பாலும் தமிழ்
வழியிலே, கல்வி கற்கின்றனர். இவர்கள் குரூப் 1 தேர்வு குறித்து, 30 வயது
கடந்த பின்னரே, தெரிந்து கொள்கின்றனர். முதல், இரண்டு தோல்விக்கு பின்னரே,
தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என, தெரிந்து கொள்கின்றனர்.இக்கால கட்டத்தில்,
தேர்வு எழுதுவதற்கான உச்ச வயது வரம்பை கடந்து விடுவதால், குரூப் 1 தேர்வு
குறித்து எண்ண முடியாத நிலைக்கு ஆளாகின்றனர். மத்திய அரசு பணியாளர்
தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., தேர்வுகள், ஆண்டுக்கு ஒரு முறை
நடத்தப்படுகின்றன. ஆனால், குரூப் 1 தேர்வு அறிவிப்பில் இருந்து, பணி
நியமனம் வரை, மூன்று ஆண்டுகள் வரை, காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த
காலகட்டத்தில், பல இளைஞர்கள், உச்ச வயது வரம்பை கடந்து விடுகின்றனர்.
இதில், கிராமப்புற மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.ஒரு
முறையாவது...இதை தவிர்க்க, கேரளா, குஜராத், அரியானா, மேற்கு வங்கம், அசாம்,
திரிபுரா போன்ற மாநிலங்களில், உச்ச வயது வரம்பு, 45 வயது என,
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதேபோல், கடந்த 9ம் தேதி வெளியான, குரூப் 1
தேர்வுக்கான, உச்ச வயது வரம்பை, 45 வயதாக உயர்த்தி, குறைந்தபட்சம் இந்த ஒரு
முறையாவது, தேர்வு எழுத வாய்ப்பளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...