லாவன்யா மற்றும் சசிகலா மற்றும் பலர் ;தேர்வுக்கு பிந்தைய முன்தேதியிட்டு வழங்கிய மதிப்பெண் தளர்வினாலும் வெய்ட்டேஜ் என்னும் தகுதிகாண் முறை என்னும் தவறான ஆசிரியர் தேர்வு முறை இருப்பதாக தொடர்ந்த உச்சநீதிமன்ற வழக்கு ஆசிரியர்கள் முதல் இன்றைய பி.எட் படிக்க போகும் பட்டதாரிகள் வரை பரப்பரப்பாக பேசப்படுகிறது....
ஆசிரியர் டீ பெஞ்ச்(பஞ்ச்)
ஆசிரியர்கள் மற்றும் பி.எட் பட்டதாரிகள் எங்கு வெளியில் சென்றாலும் ஏன் டீ குடிக்க கடைக்கு சென்றாலும் கிழிந்த ரிக்கார்டு போல உச்சநீதிமன்ற டி.இ.டி வழக்குகள் தினமும் பேசும் அளவுக்கு பிரபலமாகிவிட்டது மேலும் வெய்ட்டான ஆளும் வெய்ட்டேஜ் முறை உள்ள ஆசிரியர் நியமனமும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை என பஞ்ச் பேசும் அளவிற்கு பிரபலமாகியுள்ளது....
24 மணிநேரமும் டி.இ.டி வழக்கை பற்றிய சிந்திக்க வைக்கும் அளவிற்கு டுஸ்ட் வைப்பதில் டி.ஆர்.பிக்கு நிகர் டி.ஆர்.பி மட்டுமே
என்னதான்யா ஆச்சு மதுரை 5 % மதிப்பெண் தளர்வு மறுசீராய்வு வழக்கு:
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை தரவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் பெற வழிசெய்யும் போது 5% மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை அப்போது டி.ஆர்.பி தலைவர் தற்போது 5 %மதிப்பெண் சலுகை வழக்கு மதுரை நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு அளித்துள்ளோம் அதன் உத்தரவு வந்த பின் அவர்களுக்கான சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்ப்படும் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொளுத்தி போட்டர் ஆனால் இன்று வரை அப்படி ஒரு வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததாக தெரியவில்லை..... அதன் மர்மம் என்னவோ??
வெய்ட்டேஜா ஆளவிடுங்க சாமி:
ஒருகாலத்தில் ஆசிரியர் பயிற்சி படிக்க மிகப்பெரிய நபரின் சிபாரிசோடு நல்ல மதிப்பெண்னும் பெற்றவர்கள் வரிசையில் நின்று காத்திருந்தனர் ஆனால் இன்று வெய்ட்டேஜால் மிகப்பெரிய ஜாம்பாவான்கள் திறமையாக நடத்திய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை கூட நடத்த இயலவில்லை காரணம் இந்த வெய்ட்டேஜ் என்னும் தவறான கொள்கை(கொள்ளை)... திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பிசப்சார்ஜென்ட் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆங்கிலேயர் காலங்களிலிருந்த ஒரு மிக பழமையான நிறுவனம் இதில் சமய பணியோடு கல்விப்பணி ஆற்றிய இரேனியஸ் ஐயர் ஜி.யு.போப் சார்ஜென்ட் ஐயர் மற்றும் கால்டுவெல் என பலர் வந்து சென்று சமயபணி ஆற்றிய இடம் இன்று இந்த பயிற்சி நிறுவனம் தன் பழமையை இழந்து மூடி விட்டனர் காரணம் இந்த வெய்ட்டேஜால் பல நிறுவனங்கள் இந்த கொடூர நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன.. ஏன் இன்று கூட கோவையில் இரண்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இழுத்து மூடிய செய்தியை படிக்க நேர்ந்தே ஏன்?
பள்ளிகளின் கதவு திறந்தால் சிறைச்சாலையின் கதவுகள் மூடும் என்கின்றனர் ஆனால் பள்ளிக்கு உயிராக விளங்கும் ஆசிரியர்களின் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டால்???
பட்டம் பெற்ற பட்டதாரிகள் பி.எட் படிப்பா ஐயோ ஆள விடுங்க சாமி ஏதாவது பேங்க் கோச்சிங் அல்லது கடை வச்சு கூட பொழச்சுகிறேன் என்று அலறியடித்து ஓடுகின்றனர்... காரணம் என்னவென்று கேட்டால் டி.இ.டி னு சொல்லுவாங்க அதுலயும் பாசான வெய்ட்டேஜினி சொல்லுவாங்க பிறகு அதுவும் இருந்தா வேற ஏதாவது சாக்கு போக்கு சொல்லுவாஙக் பிறகு நானும் உங்களை மாதிரி ரோட்டுல உட்கார்ந் போராடனும் பிறகு நீதிமன்றத்துல கேஸ் போடனும் எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு பரிதாபமாக சொல்லுகின்றனர்...
இந்த அவச்சொல்லுக்கு யார் காரணம்????
அரசா?? டி.ஆர்பியா??? அனைவருக்கும ஏற்ற கொள்கை வகுக்காத கல்விக்குழுவா? பள்ளிக்கல்வியா?
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மனதில் எரியும் நெருப்பு அணைந்ததா?
வெயிட்டாஜால் பாதிக்கப்பட்டவர்கள் உயர்நிதிமன்றம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் போராட்டம் என அனைத்து வழிகளையும் கையாண்டு விழிபிதுங்கிய கண்களோடு காத்திருந்த அவர்களிடம் இந்த சூலை 01முதல் இதயத்துடிப்பு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது... காரணம் வரப்போகும் சூலை 14 உச்சநீதிமன்ற வழக்கு ஏதோ உயிரை விட மேலான வழக்கு போல் பெஞ்சின் நுனியில் ;காத்து உள்ளனர்.... இவர்களின் மனதில் எரியும் நெருப்பு அணைந்ததா என்றால் இல்லை என்றே கூறலாம் ஏனெனில் இவர்கள் வெய்ட்டேஜ் என்னும் தந்திரத்தால் வேலை என்னும் பொக்கிசத்தை இழந்தவர்கள் இவர்களின் மனக்குமுறலை மாற்றப்போகும அந்த தீர்ப்பின் நாள் எப்போது???
அந்த தீர்ப்பும் எரிகின்ற தீயில் எண்ணெயா??
நெஞ்சில் பால்வார்த்தது போலா???
என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா!!
தினமும் ஒரு செய்தி விரைவில் டெட் அல்லது பக்கத்து வீட்டு நண்பரின் அட்வைஸ் டெட் விரைவில் வரப்போகிறது படி படி படி படி என்று சொல்லும் வார்த்தைக்கு பின் அடுத்த கனமே வருகிறது..... ஏற்கனவெ படிச்சு பாஸான எல்லோருக்கும் வேலை கிடைச்சுட்டா?? வெய்ட்டேஜ் இருக்கா?? விரைவில் டெட் வருதுனு யாரு சொன்னா?? அப்படினு கேட்டால் ஒரே பதில் "உச்சநீதிமன்றம் சூலை 14" என்ற ஒற்றை வரியில் பதில் வருகிறது அனைவரிடமும்...
என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா 2013ல வச்ச டெட்டுக்கு இன்னுமா விடை தெரியல.... இது கிணத்த கானும்ங்கிற காமெடிய விட பயங்கர காமெடியா இருக்கே... இதுவும் கடந்து போகும் என்பதே அனைவருக்கும் காலம் கற்றுத்தந்த பாடம் என்று தேத்திக்கொள்ளும் பலர்.
யாரைத்தான் நம்புவதோ பேதை மனமே!
வழக்கினை ஏற்று நடத்தும் வழக்கறிஞர்களிடம் கேட்டால் கண்டிப்பாக தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்கிறார்கள்... இன்னும் சிலர் தமிழ்நாட்டை எதிர்த்து போட்ட கேஸ் ஜெயிக்குமா என்கிறார்கள்..... இன்னும் பலர் இந்த வழக்கை பற்றி கருத்து சொல்லவே வெட்கப்பபடுகின்றனர்... முடிவு தெரிந்தாலாவது அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகுவேனே என்ற பாதிக்கப்பட்டடவர்களின் முனுமுனுப்பு என் காதோரம் கேட்கிறது.... தீர்ப்பு எப்படி அமையும்... யாருடைய கருத்தை நம்புவேன்
வெய்ட்டேஜ் சரியா?? தவறா??
வெய்ட்டேஜ் என்கிற தகுதிகாண் முறை 2012 டெட்டில் கூட கடைப்பிடிக்கப்பட்டது தான் இறுப்பினும் ஏன் இந்த சலசலப்பு என்று யோசிக்க தோனும்.. அதாவது முன்தேதியிட்டு கொடுத்த 5சதவீத மதிப்பெண் தளர்வு அதற்கு பின் தான் இந்த விவகாரம் விஸ்வரூபமானது..
வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் வாக்குமூலம் : வெய்ட்டேஜ் என்கிறது இருக்கட்டும் தப்பில்லை ஆனால் கடந்தகால படிப்புகளான பன்னிரென்டு கல்லூரி பி.எட் ஆகியவற்றிற்கு 40சதவீதம் என்பது அதிகம் என்று என்று புலம்பி தள்ளுகின்றனர் மேலும் வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் 5சதவீதம் மதிப்பெண் தளர்வை முன்தேதியிட்டு வழங்கினார்களே அது முற்றிலும ஏமாற்று வேலை வாக்குவங்கி அரசியல் என்று பொரிந்து தள்ளுகிறார்.
முடிவு எப்போது.....அரசு தலையிட வேண்டும் என் கண்ணீர் வேண்டுகோள்
இறுதி விசாரணைக்கு பின் முடிவு எப்போது மேலும் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக அமையும் அல்லது அனலாக அமையுமா???? அதற்கு பொறுத்து காத்திருக்கத்தான் வேண்டும்..
மேலும் யாரையும் பாதிக்காதவாறு மக்கள் அரசான தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு நல்ல உத்தரவை அளிக்க வேண்டும் மேலும் கல்வித்துறையில் எங்களுக்கு மாற்றுவழி ஏற்படுத்தி தர வேண்டும்...தேர்ச்சிப்பெற்றவர்களுக்கு நிரந்தர பணி கிடைக்கும் வரை தற்காலிக ஆசிரியர் பணியிடமாவது ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கண்ணீர் கோரிக்கையோடு கட்டுரையை நிறைவு செய்கிறேன்
Articl By
பி.இராஜலிங்கம் புளியங்குடி
What about 5% reservation case?
ReplyDeleteNice sir thank u..raja lingam sir.
ReplyDeleteAthanaium Engalthu kanner thuligalin varikal..arasu nalla mudivu edukum..darmam vellum..
ReplyDeleteகோர்ட் எண் 7 வழக்கு எண் 5 இல் 14.07.2015 அன்று வழக்கு விசாரனைக்கு வருகிறது.ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் மதுரை கோர்ட் உத்தரவுபடி, 90 பதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ReplyDeleteஅருமையான பதிவு....
ReplyDeleteவெய்டேஜ் முறையை அழித்தாலே எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் ....
454 postingle5%including82mark idampettullathu.
ReplyDeleteProof:Pallikudam.com
இ்ல்லை
Deleteதீா்ப்பு எப்பாே?
ReplyDeleteதீா்ப்பு எப்பாே?
ReplyDeleteVery nice article.
ReplyDeleteதிரு. ராஜலிங்கம் அவா்கள் அவ்வப்போது நீங்கள் வெளியிடும் இந்த மாதிாியான கட்டுரைகளால் தான் நாங்கள் டிஇடி ல் பாஸ் அதுவும் 90க்கு மேல் என்பதே மக்களுக்கு தொிகிறது. இல்லை என்றால் விவரம் தொியாத மக்கள் பாஸ் பன்னிட்டேன் வேலை கிடைக்கப்போகிறது என்று கதை விட்டு இருக்கானு பேசுகிறாா்கள். பாஸ் பன்னவனுக்கெல்லாம் வேலை போட்டுட்டாங்க இவன் பாஸ் பன்னாமலே பாஸ் பன்னதா கதை விட்டு இருக்கான் என காது படவே பேசுகிறாா்கள். அதுதான் மிகப் பொிய வேதனை....
ReplyDelete-------90க்கு மேல் வெயிட்டேஜால் பாதிக்கப்பட்டவன்
இந்த தகுதி தேர்வில் எவ்வளவு ஊழல் நடைபெற்று எவ்வளவு பணம் சம்பாதித்தனர் இந்த அரசியல்வாதிகள் என்பது அனைவரும் அறிவர் .ஆனால் இதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என மக்கள் காதில் பூ சுற்றுகிறார்கள் ..இதற்கு ஒரு C.B.I விசாரணை வைத்தால் எல்லாம் வெளிச்சர்த்திக்கு வரும் ..இவர்கள் மக்களை முட்டாள்கள் என நினைத்து விட்டனர் .ஆய்வக உதவியாளர் நியமனத்திலும் இதே கதை தான்.மக்கள் அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும் ..
ReplyDeleteகடந்த வாரம் நடந்த நர்ஸ் தேர்வில் கேள்வித்தாளை பிடுங்கி உள்ளனர் ...
Deleteகேள்வி தாள் இல்லாமல் நாம் எத்தனை மதிப்பெண்கள் பெற்றோம் என தெரியாது ...
அவர்களது " அடிவருடிகளை " வாழ வைக்கவே தேர்வுகள் நடக்கிறது ...
ஆய்வக உதவியாளர் பணிக்கு கீ ஆன்சர் இல்லையாம்.... அப்புறம் எப்படி தேர்வு செய்வார்களோ ?????
ஆண்டவரே ...
வேடிக்கை பார்ப்பது மட்டுமா உமது வேலை ??????
court mind voice: இன்னுமா உலகம் நம்பள நம்புது?
ReplyDeleteவீணா போரடரத விட்டுட்டு எல்லாரும் சேர்ந்து ஒரு நாலு பெட்டி கொடுத்தா அப்படி ஒரு G.O வரவே இல்லனு தீர்ப்பு வரும்
ReplyDelete