Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Pudukkottai CEO press news -science inspire award regarding




        புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சி. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு சு.கணேஷ் இ.ஆ.ப அவா்கள் தலைமை தாங்கி திறந்து வைத்தார். மாநில அளவிலான கண்காட்சிக்கு 28 படைப்புகள் தோ்வு.

புதுக்கோட்டை,ஜுலை,17-
புதுதில்லி அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றின் வாயிலாக புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட  மாணவ, மாணவியரின் அறிவியல் படைப்புகளின் 2014-2015-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கண்காட்சி புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் இன்று 17ந்தேதி( வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற தொடக்க விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு சு.கணேஷ் இ.ஆ.ப அவா்கள் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமையேற்று ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி கண்காட்சியினை திறந்து வைத்து மாணவா்களின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது படைப்புகளை பார்வையிட்டு மாணவா்களை பாராட்டி சிறப்புரையாற்றினார். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் திருமதி செ.சாந்தி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினா் திரு வி.ஆா்.கார்த்திக்தொண்டைமான், அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலா்(பொ) திரு ஆா்.சண்முகம், மெட்ரிக்பள்ளிகளின் ஆய்வாளா்(பொ) திரு உ.பரமசிவம், நகா்மன்ற உறுப்பினா் திருமதி கே.ஆயிரம்வள்ளிகுமார். தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியின் தாளாளா் அருட்தந்தை ஏ.ராபா்ட்தனராஜ், பள்ளியின் தலைமையாசிரியா் திரு ஏ.பன்னீா்செல்வம்,  மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் திரு செல்லத்துரை,முன்னாள் எம்.எல்.ஏ திரு. ராசு.மற்றும் பலா் கலந்துகொண்டனா். நிறைவாக  புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலா்(பொ) திரு.ப.மாணிக்கம் நன்றி கூறினார். அதனைத்தொடா்ந்து நடைபெற்ற கண்காட்சியில் நடுநிலைப்பள்ளிகள், அரசு உயா், மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள்,  சுய நிதிப்பள்ளிகள்  ஆகிய 200க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள்  தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனா். காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த படைப்புகளில் இருந்து முதல் பரிசுக்கு ஒரு படைப்பும், இரண்டாம் பரிசுக்கு இரண்டு படைப்புகளும், மூன்றாம் பரிசுக்கு மூன்று படைப்புகளும். ஆறுதல் பரிசுகளுக்காக 68 படைப்புகளும் ஆக மொத்தம் 74 சிறந்த படைப்புகளை கல்லூரி பேராசிரியா்கள் 15 பேர்களை கொண்ட நடுவா் குழுவினர் தோ்வு செய்தனா். இதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காட்டாத்தி, அரசு உயா்நிலைப்பள்ளி வாகவாசல், அரசு உயா்நிலைப்பள்ளி வடகாடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தெற்குதொண்டைமான்ஊரணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வீரடிப்பட்டி, செபஸ்தியார் மெட்ரிக்பள்ளி மெய்யபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நெறிஞ்சிக்குடி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மலம்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி விலாக்குடிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கீழப்பளுவஞ்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆதனூா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தீத்தனிப்பட்டி, அரசு உயா்நிலைப்பள்ளி மேற்பனைக்காடு, சிவகாமிஅம்மாள் மெட்ரிக்பள்ளி ராங்கியம், அரசு உயா்நிலைப்பள்ளி பல்லவராயன்பத்தை, அரசு மேல்நிலைப்பள்ளி மண்ணவேளாம்பட்டி, அரசு உயா்நிலைப்பள்ளி கீழையூா், நகராட்சி உயா்நிலைப்பள்ளி காமராஜபுரம், அரசு உயா்நிலைப்பள்ளி மேலூா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி டி.மேட்டுப்பட்டி, அரசு உயா்நிலைப்பள்ளி ரகுநாதபுரம், அரசு உயா்நிலைப்பள்ளி எஸ்.குளவாய்ப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி அண்டக்குளம், விவேகாமெட்ரிக்மேல்நிலைப்பள்ளி விராலிமலை, சிவகமலம் மெட்ரிக்பள்ளி அரிமளம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வெள்ளாளவிடுதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேப்பூதகுடி, உள்ளிட்ட 28 பள்ளிகளின் மாணவா்கள் செய்திருந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தானியங்கி மாதிரி, பள்ளி பேருந்துகளில் விபத்து உணா்வி, தானியங்கி பண எந்திரத்தில் திருட்டைக்கண்டறிவும் குறுஞ்செய்தி வடிவமைப்பு எந்திரம், எளிய நீருற்று மாதிரி, தானியங்கி சொட்டுநீா்பாசனம், மின்விசிறியின் சுழற்சியில் மின்உற்பத்தி, கழிவுநீரில் மின்உற்பத்தி, உள்ளிட்ட 28  படைப்புகள் மாநில அளவில் நடைபெறும் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இக்கண்காட்சியை கண்டுகளிக்க   பதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார  அரசு பள்ளிகளை சோ்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு   பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது. அதனைத்தொடா்ந்து மாலையில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் திருமதி செ.சாந்தி அவா்கள் கலந்துகொண்டு கண்காட்சியில் சிறப்பிடம் பிடித்த மாணவ. மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி மாணவா்களை பாராட்டி பேசினார்.  புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் திருமதி செ.சாந்தி தலைமையில் அமைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட குழுக்கள் சிறப்பாக செய்திருந்தனா்.

படவிளக்கம் புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு சு.கணேஷ் இ.ஆ.ப அவா்கள் பார்வையிட்டபோது எடுத்தபடம். படத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினா் திரு வி.ஆா்.கார்த்திக்தொண்டைமான், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் திருமதி செ.சாந்தி மற்றும் பலா் உள்ளனா்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive