தொடக்கக்கல்வித்துறையில், குறுவள மைய பயிற்சி வகுப்பை புறக்கணித்த, 4,000 ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக, நோட்டீஸ் வழங்கப்பட்ட சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
.தமிழகத்தில், 385 யூனியன்களில் உள்ள வட்டார வளமையங்களில், தலா ஒரு யூனியனுக்கு, குறைந்தது, ஏழு வீதம், மொத்தமாக, 4,500க்கும் மேற்பட்ட குறுவள மையங்கள் உள்ளன. ஒவ்வொரு குறுவள மையமும், 10 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை உள்ளடக்கி உள்ளது.இந்த மையங்களில், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பல்வேறு தலைப்புகளில், பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மாதந்தோறும் முதல் சனிக்கிழமை, இடைநிலை தலைமையாசிரியர்,உதவி ஆசிரியர்களுக்கும், இரண்டாம் சனிக்கிழமை, பட்டதாரி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடத்தப்படும்.இந்த குறுவள மையங்களில் வழங்கப்படும் பயிற்சியின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு, ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவருக்கு அமல்படுத்த வேண்டும்.
இந்நிலையில், நடப்பு, கல்வி ஆண்டிற்கான, குறுவள மையப்பயிற்சி, கடந்த, 11ம் தேதி, எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழி கற்றல் முறை வலுவூட்டல் என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் குறுவள மையத்தில் நடந்தது.ஆனால், பயிற்சி வகுப்பில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்காமல் புறக்கணித்ததால், தொடக்கக்கல்வித்துறை சார்பில், அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மூலமாக, பங்கேற்காத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான காரணம் கூறவில்லை என்றால், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சபாஷ் சரியான நடவடிக்கை. சிலர் குறுவளப் பயிற்சியில் கல ந்துகொள்வது கெளரவக்குறைச்சலாக எண்ணுகிறார்கள். ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் பெரும்பாலும் கல ந்துகொள்வதில்லை. அவர்களுக்கு மேற்பார்வையாளர்கள் சிலரும், ஆசிரியர் பயிற்றுனர்கள் சிலரும் தங்கள் எல்லை மீறி அனுமதிக்கிறார்கள். அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
ReplyDeleteSuper
ReplyDeleteSuper
ReplyDeleteகட்சி தலைமை எம்.எல்.ஏ , வாக போட்டியிடும் தொகுதியில் அரசின் அனைத்து அமைச்சர்களும் மாதக்கணக்கில் முகாமிடுகிறார்கள்.அச்சமயத்தில் அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கிப்போய்விடுகிறது.இவர்களுக்கு யார் மெமோ கொடுப்பது.கேட்டால் அது அரசியல்,பெரிய இடத்து சமாச்சாரம் என்பார்கள்.அதற்கு இது ஒன்றும் பெரிதல்ல.கற்பித்தலில் புதுமையை ஏற்படுத்தினால் ஆசிரியர்கள் தானாக செல்வார்கள்.தலைப்பை மட்டும் தலைமை கொடுக்கும் கற்பிக்கும் ஆசிரியர் மட்டும் நம்மில் ஒருவர் எப்படி இருக்கும் பயிற்சி.........
ReplyDelete