உலகளாவிய வகையில் பிறப்பு விகிதத்தில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை ஒரு சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. எனினும், பெண்களைவிட ஆண்களுக்கு குறைந்த வயதில் மரணம் நேர்வது ஏன்? என்பது இதுவரை விடை தெரியாத புதிராகவே இருந்து வந்தது. இந்த புதிருக்கான விடையை தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம் முதன்மையாக இருந்து நிகழ்த்திய ஆய்வில், 1800 முதல் 1935-க்குள் பிறந்தவர்களைக் குறித்து 13 நாடுகளில் மூப்பியல் ஆராய்ச்சிகளை நடத்தினர். இதில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு விகிதத்தின் மீது ஆய்வு மேற்கொண்டதில், ஆண்களின் இறப்பு விகிதத்தைவிட பெண்களின் இறப்பு விகிதம் 70 சதவிகிதம் குறைவு என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்தது. உயர் ரத்த அழுத்தம், உடலில் சேரும் அதிகமான கொழுப்பு மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் போன்றவை இதயம் சார்ந்த நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனினும், ஆண், பெண் இருபாலரின் இறப்பு விகிதத்தில் புகைபிடிக்கும் பழக்கம் சுமார் 30 சதவிகித மாறுபாட்டை மட்டுமே ஏற்படுத்துகிறது.
அமெரிக்காவை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6.1 லட்சம் பேர் இதயம் சார்ந்த நோய்களால் பலியாகின்றனர். 4-ல் ஒருவர் இவ்வகையில் உயிரிழப்பதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவிக்கிறது. பெரும்பாலான இனங்களில் இருபாலர்களிலுமே இதய நோய்கள்தான் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகும். 2009-ஆம் ஆண்டு உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்கள் இதயம் சார்ந்த நோய்களாலேயே இறந்திருக்கின்றனர்.
ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் 6 நாடுகளைத் தவிர்த்து மற்ற எல்லா நாடுகளிலும் ஆண் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது இதயம் சார்ந்த நோய்கள் மட்டுமே என்பது தெரியவந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...