அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 430 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
ஆனால் ஒரு
லட்சத்து 48 ஆயிரம் பேர் மட்டுமே பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து
இருப்பதால் வழக்கம்போல் இந்த வருடமும் காலி இடங்களின் எண்ணிக்கை உயரும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாள் கலந்தாய்வில் 2017 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதில் 757 பேர் வரவில்லை. 1256 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
200–க்கு 200
கட்–ஆப் மார்க் பெற்ற 23 பேரில் 14 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
முதல் நாள் கலந்தாய்வு முடிவில் 45 ஆயிரம் காலி இடங்கள் உறுதி
செய்யப்பட்டுள்ளது.
வழக்கம்போல இந்த
ஆண்டும் மாணவர்கள் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
கம்யூனிகேஷன் பாடப்பிரிவை அதிகமாக தேர்வு செய்தனர். மாணவர்கள்
மெக்கானிக்கல் மற்றும் இ.சி.இ. பாடத்தையும் மாணவிகள் இ.சி.இ. மற்றும்
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவையும் தேர்வு செய்தனர்.
முதலிடத்தில்
மெக்கானிக்கல், இ.சி.இ. பாடப்பிரிவுகள் எப்போதும் போல இருந்தாலும் அடுத்த
இடத்தை கம்ப்யூட்டர் சயின்ஸ் இந்த வருடம் பெற்றுள்ளது. சிவில் என்ஜினீயரிங்
4–வது இடத்திற்கு சென்றது. தகவல் தொழில் நுட்ப பாடப்பிரிவை தேர்வு செய்ய
மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை.
என்ஜினீயரிங்
கல்லூரிகளில் இடங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் மாணவர்கள் அதிகளவு
சேரவில்லை. சராசரியாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் மட்டுமே பொறியியல்
கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் சேருகிறார்கள். ஆனால் இடங்கள் மட்டும் கடந்த
4 வருடத்தில் 90 ஆயிரம் இடங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த வருடம் 2
லட்சத்து 11,786 இடங்கள் இருந்தன. ஆனால் ஒரு லட்சத்து 10,789 பேர் மட்டுமே
சேர்ந்தனர். ஒரு லட்சம் இடங்கள் காலியாக கிடந்தன.
இந்த வருடம் அதேபோன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த
ஆண்டு சேலத்தில் ஒரு புதிய கல்லூரி மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மத்திய
அரசின் கல்லூரியான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி
தொடங்கப்பட்டுள்ளது. இதில் 30 இடங்கள் உள்ளன.
இன்று முதல்
கலந்தாய்வு காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை 8 பிரிவுகளாக பிரித்து
நடைபெறும். 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மாணவர்கள் வரை அழைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...