நீங்கள் எந்த இளங்கலைப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும்-- எம்.பி.ஏ.
படிக்கலாம். சும்மா படிக்க வேண்டும்,மேலும் ஒரு பட்டம் பெற வேண்டும்
என்பதற்காக எம்.பி.ஏ . படிக்கக் கூடாது.
இதை முழுமையாகத் தொழில் படிப்பாக
எடுத்துக்கொண்டு சரியான நிறுவனத்தில் படிக்கும்போது மட்டும்தான் நீங்கள்
எடுத்துக்கொண்ட லட்சியத்தை அடைய முடியும். இன்றைய மாறிவரும் சூழ்நிலைக்குத்
ஏற்றவாறு மாற்றி யோசிக்கும் திறனையும், உங்கள் துறைசார்ந்த
சிறப்புக்களையும், மனிதவள மேம்பாட்டையும், தொழில் சார்ந்த
பழக்கவழக்கங்களையும் உங்களுக்குக் கற்றுத் தரும் இடமாக இருக்க வேண்டும்.
பட்டப் படிப்பு முடித்தவுடன் எம்.பி.ஏ., படிப்பது நல்லதா? அல்லது
சிறிது காலம் வேலை பார்த்த பின்பு படிப்பது நல்லதா?
பட்டப் படிப்பு முடித்தவுடன் நீங்கள் இளமைத் துடிப்புடன் இருப்பீர்கள்.
உங்களின் கற்பனைத் திறனும் அதிகமாக இருக்கும். குடும்பச் சுமைகளும்
இல்லாமல் இருப்பீர்கள். எனவே பட்டப் படிப்பு முடித்தவுடன் படிக்கலாம். சில
நேரங்களில் வேலை செய்துவிட்டுப் படிக்கும்போது அவர்களின் அனுபவ அறிவும்
அவர்களின் படிப்பை மிகவும் தெளிவாகச் சிந்திக்கவும் உதவுகிறது. அமெரிக்கா
போன்ற சிலநாடுகளில் எம்.பி.ஏ . படிப்பிற்குக் குறைந்தபட்ச வேலை அனுபவம்
தேவை.
முழுநேர ரெசிடன்ஷியல் படிப்பு, பகுதி நேரப் படிப்பு, தொலைதுாரப் படிப்பு-- இது பற்றிய உங்கள் கருத்து?
முழு நேர ரெசிடன்ஷியல் படிப்பில் படிப்பதுதான் மிகச் சரியானதாக
இருக்கும். எம்.பி.ஏ., படிப்பில் படித்துத் தெரிந்து கொள்வதைவிட அதிகம்
பார்த்தும் பழகியும்தான் தெரிந்து கொள்ளமுடியும். அப்படி படிக்கும்போதுதான்
அவர்களின் தொழில் மற்றும் மேலாண்மை பற்றிய படிப்பிற்கு முழுவடிவம்
சரியாகக் கிடைக்கும். அதற்காக மற்ற வகையில் படிப்பது முற்றிலும் தவறு என்று
சொல்லிவிட முடியாது.
இன்று நிறையப் பேர் எம்.பி.ஏ .
படிக்கிறார்கள். தொழிலதிபர்களின் இன்றைய எதிர்பார்ப்பு என்ன?
தொழில் நிறுவனங்கள் தங்களுடைய தேவைக்கு ஏற்றவாறு, தரமான பிசினஸ்
ஸ்கூலில் இருந்து மாணவர்களை தேர்வு செய்வார்கள். துறை சார்ந்த அறிவு,
நெட்வொர்கிங் அனாலிசிஸ், தகவல் தொடர்பு திறன் ஆகியனவற்றை சரியான முறையில்
சொல்லிக் கொடுக்கக்கூடியதாக அந்த பி-ஸ்கூல் இருக்க வேண்டும்.
எம்.பி.ஏ., துறையில் பெண்களுக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது?
மேலாண்மைத் துறையில் இன்றைய உலக வியாபாரச் சந்தையில் ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடே கிடையாது. திறமைக்கு மட்டும்தான் மதிப்பு.
இந்தியப் பொருளாதாரச் சூழ்நிலைக்கும், உலகப் பொருளாதாரச் சூழ்நிலைக்கும் நம் படிப்பு எப்படி வேறுபடுகிறது?எம்.பி.ஏ.,
பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உலக மயமாக்கலை அடிப்படையாக வைத்துத் தான்
செயல்படுகின்றன. அதனால் நல்ல நிறுவனத்தில் படிக்கக் கூடிய மாணவர்கள் தங்களை
இந்தியப் பொருளாதாரச் சந்தைக்கும், உலகச் சந்தைக்கும் தயார்படுத்திக்
கொள்வார்கள். அப்படி படிப்பவர்கள் உலகின் எந்த மூலையிலும் தங்களின் படிப்பை
வைத்துச் சிறப்பாகச் செயல்பட முடியும்.-முனைவர் எஸ்.ராஜசேகர்,இயக்குனர், ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், மதுரை. 9095899955
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...